Editorial News

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

கொரோனா பரவலை முற்றாக தடுப்பதை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறையினரோடு இணைந்து, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில், மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது.

23.01.2020 முதலே விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி பரிசோதனை நடத்தப்பட்டது.

7.3.2020 அன்று தமிழ்நாட்டில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதமே தொடங்கி விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை, காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக 19 பேர் கொண்ட மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவ குழுக்களின் ஆலோசனைகளை பெற்று கொரோனா தடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள்.

தமிழ்நாட்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3371 வெண்டிலேட்டர்கள் உள்ளன.

என்.95 முகக்கவசம், மூன்றடுக்க முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது ‌.

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையிடம் 1,95,000 பிசிஆர் கிட்டுகள் இருப்பில் உள்ளன.

கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே மருத்துவ பொருட்களை வாங்கி இருப்பு வைத்துவிட்டோம்.

தமிழ்நாடு முழுவதும் 27 கொரோனா பரிசோதனை மையங்கள் மூலமாக தொடர்ந்து பரிசோதனை.

65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசம், 3 லட்சம் என்.95 மாஸ்க்குகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

27 ஆய்வகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 5,590 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம்.

கொரோனா பாதிப்பு 25 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267ஆக உயர்வு.

மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1267ஆக உயர்வு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு.

கொரோனா பாதிப்பிலிருந்து 62 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 180ஆக உயர்வு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.

97.9% குடுப்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.

85.25% குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.134.64 கோடி தொகை வந்து சேர்ந்திருக்கிறது.

விவசாயிகள் உற்பத்தி பொருட்களை அரசு கிடங்குகளில் இலவசமாக வைத்துக் கொள்ளலாம்.

விலையேறும்போது, தங்கள் விளைபொருட்களை எடுத்து விவசாயிகள் விற்பனை செய்யலாம்.

சென்னையில் 1100 மோட்டார் வாகன வண்டிகள், 4900 தள்ளுவண்டிகள் மூலமாக காய்கறிகள் விற்பனை.

காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு தவறானது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், அரசே, அங்குள்ள மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது.

உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடுகு, மிளகு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை.

144 தடை உத்தரவை மீறிய 2,08,139 பேர் கைது; 1,94,995 வழக்குகள் பதிவு; 1,79,827 வாகனங்கள் பறிமுதல்.

கொரோனா பரவலை தீவிரத்தை முன்வைத்து 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

சிகப்பு வண்ணத்தால் குறிப்பிடப்பட்ட அதிதீவிர பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றுநோய் பரவலில் தமிழ்நாடு இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது.

கொரோனா தொற்றுநோயின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது; சமூக தொற்றாக மாறவில்லை !

வருகிற 20ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழு அளிக்கும் அறிக்கைகளை பொறுத்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலைதிட்டத்தைத் தொடங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

அனைத்து விவசாயப் பணிகளையும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொடங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைவான அளவே நிவாரண உதவி.

மத்திய அரசை வலியுறுத்தி, மாநில அரசுக்கு நிதி பெற்றத்தர திமுக எம்.பி.க்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், அரசின் நடவடிக்கைகளை திமுகவினர் குறை சொல்வது வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் நோயை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் மொத்த செலவையும் அரசு ஏற்கும்.

ஏப்.20 முதல் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து அறிக்கை அளிக்க நிதித்துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு.

Related posts

COVID19: TN reports 96 new cases

Lakshmi Muthiah

Coronavirus has been declared a pandemic: What does that mean?

Penbugs

Ayodhya Verdict Live: Muslim parties to get alternate land

Penbugs

SpaceX successfully launches first crew to orbit

Penbugs

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

FIVE SIMPLE LIFE TIPS YOU SHOULD KNOW

Penbugs

Nasa confirms that Vikram Lander had hard landing on moon

Penbugs

நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Penbugs

4th death warrant for Delhi gangrape convicts; to be hanged on March 20!

Penbugs

Will reconsider minimum age of marriage for daughters: PM Modi

Penbugs

ஹத்ராஸ் நகருக்கு நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி கைது

Penbugs

Born on this day- August 3, Sunil Chhetri

Penbugs