Cinema

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், விடுதியின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related posts

Mindy Kaling gives birth to a baby boy

Penbugs

Toxic environment: The Ellen Show is under investigation

Penbugs

MY FAVORITE 17 OF YUVAN SHANKAR RAJA

Penbugs

Actor Scarlett Johansson- SNL’s Colin Jost get married in intimate ceremony

Penbugs

Maha New Poster | STR birthday Special

Penbugs

Rapist Weinstein jailed for 23 years

Penbugs

Happy Birthday, Sai Pallavi

Penbugs

நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Penbugs

Keerthy Suresh starrer Penguin trailer is here!

Penbugs

Priyanka Chopra wants to see more brown people in Hollywood

Penbugs

கர்ணன் – உரிமைக்காக களம் கண்டவன்!!!

Shiva Chelliah

Songs I love: Voh Dekhney Mein

Penbugs

Leave a Comment