சென்னை புறநகர் ரயிலில் நாளைமுதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல் மே 20ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை.
மேலும், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

