Cinema

பிப். 28-ல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் ஏலே படம்

சில்லு கருப்பட்டி புகழ் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏலே’.

சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம், ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக இருந்தது.

இந்நிலையில் 30 நாட்கள் கழித்துத் தான் ஓடிடி வெளியீடு என்ற கடிதம் கேட்டது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். ஆனால், இந்தக் கடிதத்தைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு சுமுக முடிவும் எட்டவில்லை.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்தது.

இந்நிலையில், ‘ஏலே’ படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். முதன்முறையாகத் திரையரங்கம், ஓடிடி என்ற எதுவுமின்றி நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 28-ம் தேதி அன்று மதியம் 3-ம் மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘ஏலே’ திரைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புக்கான காரணம் குறித்து, “சில ஆச்சரியகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் திரையரங்குகளைத் தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது” என்று ‘ஏலே’ படக்குழு தெரிவித்துள்ளது.

திரையரங்க உரிமையாளர்களின் கெடுபிடியால், ‘ஏலே’ படத்தினை நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படக்குழு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

Related posts

Malavika Mohanan’s bike racing video

Penbugs

Vijay Sethupathi slams the revocation of Article 370

Penbugs

Filmfare Awards 2020: Full list of winners

Penbugs

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

Kesavan Madumathy

Even Fake Flowers Have Scent On Happy Days: Review

Lakshmi Muthiah

12 Best Performances of Aditi Rao Hydari

Lakshmi Muthiah

Happy Birthday, Trisha!

Penbugs

Happy Birthday, Varalaxmi Sarathkumar!

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

Road named after Sushant Singh in his hometown

Penbugs

PC Sreeram’s next with Gautham Menon

Penbugs

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

Leave a Comment