தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

I will not apologise: Rajinikanth about his comments on Periyar