Penbugs
Cinema

எந்திரன்…!

எந்திரன் வந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் இயக்குனர் சங்கரின் எழுத்தில் , சுஜாதா மற்றும் சங்கரின் வசனத்தில் , ரகுமானின் மிரட்டல் இசையில் சூப்பர்ஸ்டாரின் சூப்பர்ஹிட் திரைப்படம் எந்திரன் .!

எந்திரன் படத்தில் நான் பெரிதும் வியந்த ஒரு விசயம் மதன் கார்க்கி கவிஞராக அறிமுகமாகிய முதல் படம்..!

இயக்குனர் சங்கருக்கு தான் வைரமுத்துவின் மகன் என அறிமுகம் ஆகாமல் தன்னுடைய கவிதை தொகுப்பினை தந்து வாய்ப்பு தேட சென்றவர் கார்க்கி …!

அவரின் முதல் பாடலான இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ பாடலின் வரிகள் இத்தனை ஆளுமைகளுக்கு நடுவில் ஒரு பொறியியல் பட்டதாரியின் வார்த்தை ஜாலங்கள் அதுவும் ஒரு ரோபோட்டுக்கு காதல் வந்தால் என்ற புதிய கான்சப்டுக்கான பாடலை இதைவிட சிறப்பாக அதுவும் முதல் படத்திலயே எழுதியது மதன் கார்க்கியின் திறமைக்கு சான்று …!

பாடல் முழுவதுமே மதன் கார்க்கியின் வரிகளில் வார்த்தை ஜாலம் விளையாடியது.

“மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
shutdown னே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத் தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே – என்
விதிக்களை மறந்தேன்
எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா?
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகக் சொல்வாயா?
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே ”

என தன்னுடைய வருகையை தமிழ் சினிமாவிற்கு அடித்தளம் இட்டு காட்டினார் மதன் கார்க்கி….!

வைரமுத்துவின் வரிகளும் அறிவியலை மையப்படுத்தியே எழுதப்பட்டது மகனுக்கு சரிசமமான போட்டியை தந்தார் வைரமுத்து

அரிமா அரிமா பாடலில்

“நான் மனிதன் அல்ல
அஃறிணையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்”

காதல் அணுக்களில் பாடலில்

“ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்”

புதிய மனிதா பாடலில்

“நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமொழி
நீ பெற்றது நூறுமொழி
ஈரல் கனையம் துன்பமில்லை
இதயக்கோளாறேதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை ”

என வைரமுத்துவும் தன் பங்கிற்கு வரிகளால் அறிவியலையும், தமிழையும் ஊட்டி இருந்தார்…!

அறிவியல் பிண்ணனி கொண்ட ஒரு படத்தில் பாடல் வரிகளும் இந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது படத்தின் வெற்றிக்கு பெரிய பலம்‌..!

ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் , ரகுமானின் பாடல் மற்றும் பிண்ணனி இசையும் , சங்கரின் கற்பனைக்கு உயிர் கொடுத்தது …!

படத்தில் ஒரு காட்சியில் வரும் கொசுவிற்கு ரங்குஸ்கி என பெயர் சூட்டப்பட்டு எழுத்தாளர் சுஜாதாவிற்கு மரியாதை செய்தது ரசிக்க வைத்த ஒன்று …!

சூப்பர்ஸ்டாரின் மாறுபட்ட நடிப்பும் மாஸான அந்த பிம்பமும் படத்தை தூக்கி நிறுத்தின ஒரு விமர்சகர் கூறியது

” Robot rides on Rajinikanth’s shoulders and he never stoops under the burden ”

மொத்தத்தில் தமிழ் சினமாவை வர்த்தக ரீதியாகவும் , தொழில்நுட்ப ரீதியாகவும் அடுத்த தளத்திற்கு கொண்டு சென்ற ஒரு படம் எந்திரன்….!