Cinema Fitness Inspiring

ஓர் யுகத்தின் வெய்யோன்

அறுபடை முருகனும் துணை இருப்பான்
நெல்ல அறுத்திட மணியென
வெளஞ்சிருப்பான்,

இந்த வரிகள் மேல ஒரு ஈர்ப்பு
உருவாகிருச்சு,அந்த ஈர்ப்புக்கு
காரணம் சிம்பு,ரொம்ப வருஷம்
கழிச்சு படம் நடிக்கிறார்,படம்
ஓடுதோ இல்லையோ இந்த வரிகள்
மட்டும் என்னமோ செய்யுது,

இந்த வரி ஒரு மாதிரி மண்டக்குள்ள
ஓடிட்டே இருக்கு மொமெண்ட்ன்னு
சொல்லலாம்,சிம்பு ஆன்மீக வழியை
சில காலங்களாக பின்தொடர்கிறார்
என்பது அனைவருக்கும் தெரிந்தது
தான்,கவிஞர் யுகபாரதி அவர்களும்
இதை மனதில் வைத்து தான் இந்த
வரிகளை சிம்புவிற்கு எழுதியிருப்பார்
என்று தோன்றுகிறது,

நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு
அவர்களின் பெயர் கடவுள்,அந்த
கடவுளின் உட்கிளையில் நிறைய
பெயர்களை கொண்டு பிரித்தாலும்
கடவுள் நிலையை அடைந்தவனுக்கு
மட்டுமே தான் வணங்கும் அந்த ஒரு
கடவுளின் மேலே உள்ள ஈர்ப்பு இங்கு
வெளிச்சம்,

அந்த ஈர்ப்பின் வெளிச்சம்
சிம்புவின் மேல் விழுந்துவிட்டது,

சிலர் சிரிப்பார்கள் நம்மை ஏளனமாக நினைத்து,சிலர் இவன் எப்பொழுது கீழே விழுவான் நான் மிதித்து செல்ல வேண்டும் இவனை என்று நம்மை அடித்து உட்கார
வைக்க வேண்டும் என்று தகுந்த நேரம்
பார்த்து காத்துக்கொண்டிருப்பர்,அதற்கு
நாம் பிடி கொடுக்கவில்லை என்றால்
கடைசி வரை இவன் வீழ்வான் இவன்
வீழ்வான் என்று அவர்கள் காத்திருந்து
காத்திருந்து காலத்தை கழித்து
கொண்டிருப்பார்கள் இது சிம்புவுக்கு
இல்லை நாமும் இந்த நிலையை கடந்தும்
வந்திருப்போம் சிலருக்கு இனிமேல் நிகழ
கூட வாய்ப்புகள் இங்கே அதிகம்,

ஏதோ ஒரு சூழ்நிலையில் அடிபட்டு
மிதிபட்டு துவண்டு கிடக்கும் ஒருவன்
நாளடைவில் தன் சுயத்தில் மீண்டு
வருகிறான் என்றால் அவன் அடுத்து
ஒரு சரித்திர யுக்தியை எதிர்நோக்கி
தன் வருகையை உலகத்திற்கு பதிவு
செய்கிறான் என்பது தான் இங்கே
வழக்கமான ஒன்று,இது ஒரு நடிகருக்கு
சொல்லப்படும் எடுத்துக்காட்டு அல்ல
நம்மை போன்ற வெகுஜன
மனிதர்களுக்கும் இது பொருந்தும்,

தொட்டதெல்லாம் துலங்கும் நேரமிது
கொட்டட்டும் முரசு தெக்கத்தி ஊரில்
நின்று பறக்கட்டும் என் கொடி என்று
அடுத்த அத்தியாயத்தை சிம்பு
தொடர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்,

வரலாறு திருத்தி எழுதப்படுகிறது..!!! ❤️

Related posts

Throwback: STR on handling breakups, “I used to cry till I get tired”

Penbugs

Watch: Sarvam Thaala Mayam teaser here!

Penbugs

Mika Singh offers help for actor-turned-watchman Savi Sidhu

Penbugs

சைக்கோ…!

Kesavan Madumathy

Darbar Movie Review | Penbugs

Kesavan Madumathy

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

Venkat Prabhu’s Live Telecast (series): A clumsy attempt with the familiar supernatural story

Lakshmi Muthiah

Poke the rogue in the dark room

Penbugs

Anushka Sharma-Virat Kohli reveals the name of their baby girl

Penbugs

Heartwarming video: Residents welcomes COVID19 doc with thunderous applause

Penbugs

மகேந்திரன்..!

Kesavan Madumathy

Leave a Comment