Coronavirus

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகாதாரஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று நாட்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.

இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

COVID19: Rohit Sharma donates Rs 80 Lakhs

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

Steve Smith thinks saliva ban is not a great move

Penbugs

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs