Cinema

“பெண்குயின்” – திரை விமர்சனம் ‌…!

திரையரங்கில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி யில் வெளியாகும் இரண்டாவது “பெரிய” தமிழ் படம் பெண்குயின்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நள்ளிரவில் வெளியிடப்பட்டது .

தற்போது த்ரில்லர் படங்கள் டிரெண்ட் என்பதால் இயக்குனர் இந்த படத்தை திரில்லராக எடுக்க முயன்றுள்ளார் . திரில்லர் படத்தில் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை உன்னிப்பாக கவனிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் படத்தின் சுவாராசியம் குறையாமல் இருக்கும்.

கர்ப்பிணி பெண்ணாண கீர்த்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது முதல் குழந்தையை தேடி செல்வதே இந்த படத்தின் கதை.

படத்தில் ரிதம் (கீர்த்தி சுரேஷ்) கர்ப்பிணி பெண், தனது மகன் அஜய்-யை தேடி செல்கிறார்.ரிதமின் முன்னாள் கணவராக ராகு (லிங்கா), தற்போதைய கணவராக கவுதம் ( ரங்கராஜ்) நடித்துள்ளார். படத்தில் உள்ள கதாபத்திரங்கள் போலீஸ் உள்பட அனைவரும் கீர்த்தி சுரேஷின் மகன் இறந்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் இதை நம்பாமல், மகன் எங்கோ ஒரு இடத்தில் உயிருடன் இருப்பதாக நம்பி தேட செல்கிறார், அடுத்து என்ன ஆகிறது என்பதே கதை .

படத்தின் கதை களம் சுவரஸ்யமாக இருந்திருக்கலாம். ஒரு சாதாரண கதையை திரில்லராக தரும் முயற்சியில் நீட்டி முழக்கியுள்ளார் படத்தின் இயக்குனர்.

ரொம்ப சுமாரான இசையை சந்தோஷ் நாராயணன் தந்துள்ளார் . திரில்லர் வகையான படத்திற்கு பிண்ணனி இசை ரொம்ப முக்கியம் ஆனால் இந்த படத்தின் பிண்ணனி இசை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான நம்பிக்கைதன்மையை கதையின் எழுத்து தரவில்லை . கதையாக்கத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்‌.

படத்தின் பெரிய பிளஸ் : கீர்த்தி சுரேஷின் நடிப்பு, நாயின் நடிப்பு.

படத்தின் மைனஸ் : ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை தரவில்லை .

திரில்லருக்கு உண்டான எந்த ஒரு அம்சமும் இந்த படத்தில் இல்லை என்பது பெரிய வருத்தம்தான் .

Related posts

Grammys 2020: Full List of Winners

Penbugs

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Dhanush’s next with Karthik Subbaraj named as Jagame Thanthiram

Penbugs

Taapsee Pannu to essay the role of Mithali Raj in her biopic

Penbugs

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments

Penbugs

Asuran | Review

Penbugs

SPB ordered a statue of himself before his death

Penbugs

Happy Birthday, Mr.Feel Good Musician

Penbugs

Sivakarthikeyan starrer- Hero teaser is here!

Penbugs

Kamal Haasan to undergo surgery

Penbugs