2010 – ஒரு மெகா பிளாக்பஸ்டர்
ஆல்பமாக ரஹ்மான் இசையில்
எந்திரன் வெளியானது,
சிட்டி டான்ஸ் ஷோ கேஸ் பாடலில் சிங்கர்
லிஸ்ட்டில் பார்த்தால் பிரதீப் விஜய் என்று
ஒரு பெயர் இருக்கும் நிறைய பேருக்கு
நம்ம பிரதீப் “ஆசை ஒரு புல்வெளி ” – ல
தான் தெரியும் அட்டக்கத்தி மூலமா,
பிரதீப்குமார் விஜயகுமார் என்ற
பெயருடைய நம்ம பாடகர் பிரதீப்
குமாரின் முதல் பாடல் எந்திரன்
டான்ஸ் சாங் தான்,
பிறகு அட்டகத்தியில் சந்தோஷுடன்
கூட்டணி பிறகு சந்தோஷ் உடன் மட்டுமே
கூட்டணி என்று சொல்லும் அளவிற்கு
பிரதீப் பாடுன எல்லாமே கிளாஸ்ஸிக்
தான்,
ஒரு தாய் தன்னோட குழந்தைக்கு எப்படி
தாலாட்டு பாடுறப்போ அவங்க குரல்ல
ஒரு தாய்மை உணர்வு இருக்கும் அது
பிரதீப் குரல் வழியே ஒவ்வொரு பாடலின்
வழியிலும் நாம் உணரலாம்,
பிரதீப் ஒரு பாடல் பாடினாலே அது
எனக்கு சொர்க லோகத்திற்கு கூட்டிச்
செல்லும் அழகான ஏலேலோ ராகம் தான்,
||
தி லைஃப் ஆஃப் ராம்
ஆசை ஒரு புல்வெளி
நீ கவிதைகளா
மோகத்திரை மூன்றாம் பிறை
பூமியில் வானவில்
ஆகாசத்த
கோடையில மழை போல
மாற்ற பார்வை
காதல் கனவே
ஜிகர்
ஆகாயம் தீப்பிடிச்சா
பூ அவிழும் பொழுதில்
போடா போடா
அவள்
இணைவோம்
வானம் பார்த்தேன்
தூண்டில் மீன்
என்ன நான் செய்வேன்
மேகமோ அவள்
கோடி அருவி
||
இந்த வரிசை பாடல்கள் எல்லாமே
பிரதீப் சைலண்ட்டா செய்த
பெஸ்ட் சம்பவம்ன்னு சொல்லலாம்,
யுவன் குரலில் இரவுகளில் பாடல்
கேட்டால் அவரின் ஈரமான குரலுக்கு
எப்படி நம்மை அறியாமல் அழுகை
வருமோ அதே வகையறா தான்
பிரதீப்பும், நம்மை அறியாமல் நம்
கண்ணீரின் ஓரத்தில் துளி கண்ணீர்
சிந்தும் அங்கு தான் ஒரு பாடகராக
பிரதீப் நம் மனதில் டெண்ட்டு போட்டு
குடி பெயர்ந்து விட்டார்,
இப்போது இசையிலும்
மனுஷன் கலக்கிட்டு இருக்காரு,
நம் இசை அமைப்பாளர்கள் பெரிதும்
கொண்டாடப்படாமல் இருக்கும் ஒரு
கலைஞன் தான் இந்த பிரதீப்,
பூக்கடையில் பூக்கள் மீது தண்ணீர் தெளித்து
கொண்டே இருப்பார் பூக்கடைக்காரர்
அது வாடிப்போகாமல் இருக்க, அது
போல் தான் பிரதீப்பின் குரல், நமக்கு
தொய்வு ஏற்படும் போதெல்லாம் இவர்
குரல் கேட்டால் மனசு லேசான மாதிரி
ஒரு பிளேசன்ட் உணர்வு கிடைக்கும்,
வாழ்த்துக்கள் பிரதீப்
இனிமேலும் எங்கள உங்க குரல்
கூட எங்கேஜ்ட்டா எப்போதும் வைங்க,
Toxic environment: The Ellen Show is under investigation