Editorial News

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமர் மோடியிடம் தான் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடந்ததைச் சுட்டிக் காட்டி உள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் கூறியதையும் அவர் குறிப்பிட்டுளளார்.

அதற்காக மத்திய – மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூத்தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மோடியிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

Dalit man beaten-up in Karnataka for allegedly touching an upper caste man’s bike

Penbugs

‘Simplicity’ Newsportal founder booked under Epidemic Diseases Act

Penbugs

இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

Four minor boys rape speech-impaired woman

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

Sheep sold for £367,500 at auction

Penbugs

Man orders laptop online, receives stone instead

Penbugs

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி…!

Penbugs

அயோத்தியில் கட்டப்படும் ஸ்ரீராமர் கோவிலின் சிறப்பம்சங்கள்

Kesavan Madumathy

Leave a Comment