Penbugs
Editorial News

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தமிழகம் வர உள்ளார்.

இதனை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நாளை (14.02.2021) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி, கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்ட திருப்பி விடப்படும்.

கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம் எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

சவுத்கொனல் ரோட்டில் இருந்து காந்தி சாலை நோக்கி வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம் என்று தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

Complete list of 2020 International Emmy Awards

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

APOLLO HOSPITALS LAUNCHES POST-COVID RECOVERY CLINICS ACROSS NETWORK

Penbugs

மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

Kesavan Madumathy

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

Penbugs

Demi Lovato says they are non-binary

Penbugs

Leave a Comment