Editorial News

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத் திட்டம் ; எம் ஃபில் படிப்புகள் நிறுத்தம்

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் மத்திய உயர்கல்வித் துறை செயலர் அமித் கரே, அதன் விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை செயல்படுத்தும் வகையில் உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

8-ம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்றும், சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப் பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத் திட்டம் பலரின் எதிர்ப்புகளை மீறி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தாய் மொழி அல்லது பிராந்திய மொழி கட்டாய மொழியாகவும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் ஏற்கனவே இருந்து வரும் சூழலில், புதிதாக விருப்ப மொழியையும் ஒரு பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை இந்திய மொழிகள் என்ற தலைப்பில் மாணவர்கள் விளையாட்டு அல்லது செயல்முறைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பிற நாட்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எம்.ஃபில்., (M.Phil.,) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும்.

உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். அதாவது பொறியியல் போன்ற உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய கல்விக் கொள்கை குறைத்து மாநிலங்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.

புதிய கல்விக் கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர், கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.

Related posts

Goals: Since nursery, classmates carry polio attacked kid to school daily!

Penbugs

Book predicted coronavirus 40 years ago!

Penbugs

VIL offers a unified Vodafone RED experience to all postpaid customers

Penbugs

Lok Sabha passes ‘Triple Talaq’ bill

Penbugs

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

Penbugs

Football legend Xavi tested positive for coronavirus

Penbugs

Meet Katie Bauman, the woman who wrote the algorithm for black hole image

Penbugs

Tokyo Olympics: New dates announced

Penbugs

இது அம்மாவின் அரசா…? கமல்ஹாசன் கேள்வி!

Penbugs

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

Penbugs

Chennai Power shutdown on July 18 for Maintenance: List of places

Penbugs

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

Penbugs

Leave a Comment