Editorial News

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

பொதுமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர வருகிற மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தின் ஒருமாத காலம் நோன்பு, பிறை தெரிந்ததால் இன்று முதல் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்றும், நோன்பு முடிக்க மாலையில் ஒன்று கூடுவதையும், இப்தார் நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “ரம்ஜான் வாழ்த்துகள்! ஒவ்வொருவரும் பாதுகாப்புடனும், வளமுடனும் இருப்பதற்காக நான் பிராத்திக்கிறேன். இந்த புனிதமான மாதம் நமக்கு கருணை, மனிதநேயம், இரக்கத்தை கொண்டு வரட்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

Noteworthy performance in an unprecedented quarter

Penbugs

2012 Delhi Rape case: Court postpones the hanging of rapists

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

FIR launched against unidentified people for killing pregnant elephant

Penbugs

I owe my career to him: Fahadh Faasil on Irrfan Khan…!

Penbugs

முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

Kesavan Madumathy

1 channel for 1 class: FM announces help for students who don’t have internet access

Penbugs

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

PM Modi to share video message tomorrow

Penbugs

IT giants Cognizant hit by ‘Maze’ Ransomware

Penbugs