Coronavirus

ஏடிஎம் மூலம் பரவிய கொரோனா: 3 ராணுவ வீரர்கள் பாதிப்பு – அதிர்ச்சிகொடுத்த ட்ராக் ஹிஸ்டரி

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதை கட்டுப்படுத்தத்தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் மக்கள், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் பரோடாவில், பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்கள் உட்பட, 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .

இவர்களுக்கு கொரோனா எப்படிப் பரவியிருக்கும் என்பது தொடர்பாக நடந்த ட்ராக் ஹிஸ்டரியில், மூவரும் ஒரே நாளில் ஒரு ஏடிஎம்மை உபயோகித்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த ஏடிஎம் சீல் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம்மை பயன்படுத்திய பொதுமக்களும் தாங்களாக முன்வந்து அரசுக்குத் தகவல் தெரிவித்து, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு பரோடா நகர அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

TN Govt announces Rs 1000 relief for 13 lakh differently abled in the state

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

N95 mask inventor comes out of retirement to help with COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று ‌1385 பேருக்கு கொரோனா

Penbugs