Coronavirus

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில், முதல் இடத்தில் ராயபுரமும், 2வது இடத்தில் தண்டையார்பேட்டையும் உள்ளது.

ராயபுரத்தில் இதுவரை 8 ஆயிரத்து 89 பேரும், தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 637 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும், மறுபுறம் குணமடையும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதன்படி ராயபுரத்தில் இதுவரை 5 ஆயிரத்து 639 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் ராயபுரத்தில் 2 ஆயிரத்து 309 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 29 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல், தண்டையார்பேட்டையில் இதுவரை 4 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது, தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 838 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 28 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

COVID19: Jos Buttler to auction his World Cup final jersey to raise funds

Penbugs

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

Penbugs

‘Most vulnerable bubble’, ‘Lot of political stuff that goes into it’: Adam Zampa on quitting IPL 2021

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs

டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை : மத்திய உயர்கல்வி செயலர்

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs