Coronavirus Editorial News

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை 8ஆம் தேதி காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

8ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை 6 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் ஜூலை 14ம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரிடம் சிபிஐ காவல் விசாரணை நடத்தப்படாத நிலையில் கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மோசமாகி கடந்த 8ம் தேதி ஐசியு வார்டிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related posts

Sam Curran in self-isolation after reporting ‘sickness and diarrhoea’

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

COVID19: 15YO girl cycles 1200km to bring ailing father home

Penbugs

COVID19: Feeling bad for Abhishek, says Amitabh Bachchan

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில் திடீர் ஆய்வு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

3-time Delhi CM Sheila Dikshit passes away at 81!

Penbugs

Chennai woman beats up man who sent her obscene videos by inviting him home

Penbugs

Leave a Comment