திமுகவின் வேட்பாளா் பட்டியலை அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழா் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகள் போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
