இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 771-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள COVID19 நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டு கொண்டுள்ளது.
இதனால் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள முடியும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .
