Penbugs
Editorial News

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மாநிலத்தின் மீது எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தமிழில் டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோதே, தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தநிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தநிலையில் மீண்டும் அதில் உள்ள கருத்துகளுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்ப்புக்குரல் வலுத்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசிய உரையின் தமிழாக்க வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

மேலும் அதில் தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ‘டிவிட்டர்’ பக்கத்தில் தமிழில் கருத்துகளை பதிவு செய்து இருந்தார்.

அதில் அவர், ‘பொன்.ராதாகிருஷ்ணன்ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு, எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத் திட்டம் ; எம் ஃபில் படிப்புகள் நிறுத்தம்

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

Leave a Comment