தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுபாடு எனக்கூறி மூடி சீல் வைத்தது தமிழக அரசு
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது .
தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஸ்டெர்லைட் ஏற்படுத்தியுள்ளது .
எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் மூடப்பட்டது .
ஸ்டெர்லைட் ஆலையல் நீர், நிலம், காற்று என மூன்றும் மாசுபடுகிறது .
ஸ்டெர்லைட் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது என உச்சநீதிமன்றம் 2010ல் தீர்ப்பளித்துள்ளது .
2010ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது – தமிழக அரசு
ஆலை கழிவுகளில் சல்பைடு, மெக்னீசியம் போன்ற வேதிப் பொருட்களின் அளவு நிர்ணயித்ததை விட அதிகமாக இருந்தது ஆகிய காரணங்களுக்கா மே 28, 2018-ல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது
தமிழக அரசு உத்தரவை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு
டிச.15, 2018 அனறு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது
பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
விசாரணை முடிவடைந்து கடந்த ஜனவரியில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் இன்று தீர்ப்பு வழங்குகினர்.
இன்று வழங்கிய தீர்ப்பின்படி
ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்
வேதாந்தா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்த தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை கொடுக்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர் இணைப்பை மீண்டும் கொடுக்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்
815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம்.