தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் :
இன்று புதிதாக 2,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் இன்று சென்னையில் மட்டும் 969 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
80,253 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 1,527 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,55,085 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 12,684 பேர் பலியாகியுள்ளனர்.
