Penbugs
CinemaIn Conversation WithInspiring

Chai With Halitha Shameem | Director | Inspiration

எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது
தான் அமையும்,அப்பறம் நம்ம
எதிர்பார்த்து காத்திருந்தாலும்
பரிபோன வாய்ப்பு போனது
தான்,கிடைக்கும் போது வாய்ப்பை
சரியான முறையில் தக்க
வைத்துக்கொள்ள வேண்டும்,

அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர்
ஹலிதா அக்கா – வை சந்திக்க
அரங்கேறியது,அவர்களின் சொந்த
ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து
மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில்
உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம்
என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு
செய்திருந்தார்,

கோடை கால விடுமுறையில்
மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக
ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில்
ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என
எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும்
சிறுவனை போல நானும் மாலை
அங்கு சென்று விட வேண்டும்
அவர்களை சந்திக்க வேண்டும்
என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள்
ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர்
அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி
வைத்தேன் இன்று மாலை சூர்யா
பேக்கரிக்கு உங்களை காண
வருகிறேன் என்று, “வாங்க” என்று
பதில் ரிப்ளை செய்திருந்தார்கள்,

கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar

ஐயும் அழைத்துக்கொண்டு தாராபுரம்
நோக்கி பைக்கில் சென்றோம்,பாதியில
வேலைய விட்டுட்டு வரேன் ஒரு வேள
அங்க போய் டைரக்டர் அக்காவ
பார்க்கல உனக்கு இருக்கு ண்ணே
போன்ற தனசேகரின் மனம்
குமுறல்களோடும்,தாராபுரம் போகின்ற
வழியில் காரணம்பேட்டையில் தனது
பைக்கை ஸ்டாண்டில் நிப்பாட்டி விட்டு
என் பைக்கில் வந்த தனசேகரின் சட்டை
பையில் இருந்த பைக் டோக்கன்
காற்றோடு காற்றாக கலந்து
தொலைந்து போய் அவனை
புலம்பவிட்ட கதையெல்லாம்
அரங்கேறிய பின்னர் இருவரும்
4:30 மணிக்கெல்லாம் தாராபுரம்
சூர்யா பேக்கரிக்கு வந்து
சேர்ந்தோம்,பேக்கரிக்கு வந்தவுடன்
” வந்து சேந்தாச்சு ” என நான் மெசேஜ்
அனுப்பியதும் ” ஆஹா வர்றேன் “
என அக்கா ரிப்ளை செய்தார்கள்,

அக்காவை பார்க்க நம்மை போல்
யாராவது வந்திருப்பார்களா என
நானும் தனசேகரும் பேக்கரியை
சுற்றி முற்றி பார்த்தோம்,ஒருவர்
தன்னையே மீண்டும்?மீண்டும்
செல்ஃபி எடுத்துக்கொண்டு
இருந்தார்,அகத்தில் இருப்பது தான்
முகத்தில் தெரியும் ஆயிரம் செல்ஃபி
எடுத்தாலும்ன்னு அவர பத்தி பேசிட்டு
அவர் அக்காவ தான் பார்க்க
வந்துருக்காருன்னு கணிச்சுட்டு
நின்னோம்,தாராபுரத்தில் பிரதமர்
மோடி அவர்களின் பிரச்சாரம் என்பதால்
பேக்கரியில் வெள்ளை சட்டை படைகள்
நிறைய தென்பட்டது,பேக்கரிக்கு
வெளியவும் கட்சி கொடிகள் தோரணம்
கட்டப்பட்டு இருந்தது,ஆஹா ஏதோ கட்சி
கூட்டத்துக்கு பிரியாணி பொட்டணத்துக்கு
வந்தவங்கன்னு நம்மளையும்
நினைச்சிருவாங்கன்ற
மனநிலைல அக்காவுக்கு காத்திருந்தோம்,

இன்னும் ஒரு சிலர் கையில் Bouquet
மற்றும் கிஃப்ட் பேக் செய்யப்பட்ட
பரிசுகளுடன் ஒரு செலிபிரிட்டியை
சந்திக்க போகிறோம் என்கிற லுக்கில்
வந்திருந்தார்கள்,நானும் தனசேகரும்
ஏதோ பக்கத்து வீட்டுல சின்ன வயசுல
நமக்கு டியூஷன் எடுத்த மாலா அக்காவ
ரொம்ப நாள் கழிச்சுப்பார்க்க போறோம்
அப்படின்ற மாதிரி ரொம்ப கேசுவலா
நின்னோம்,

சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடங்களில்
அக்கா செஞ்சிவப்பு வண்ண காரில்
ப்ளூ கலர் சுடிதாரில் வந்து
இறங்கினார்கள்,மான் கராத்தே
சிவகார்த்திகேயன் பாணியில்
ஆஹா எனக்கும் பிடிச்ச கலர் ப்ளு
என சொல்லிக்கொண்டே அக்காவை
பார்த்துக்கொண்டிருந்தேன்,சிலர்
அக்காவை வரவேற்றுக்கொண்டு
இருந்தார்கள் வாங்க மேடம், வெல்கம்
மேடம் என,நாங்க மட்டும் ” அக்கா
வணக்கம் ” நல்லா இருக்கீங்களா
என கேட்டோம்,கடைசியாக அக்காவிற்கு
நான் மெசேஜ் செய்திருந்ததால்
Chat Box – இல் என் முகம் அவர்களுக்கு
பதிவு ஆகியிருக்கும் போல்,
உங்க முகம் தான் நல்லா ஞாபகமிருக்கு
என கூறினார்கள்,அதுவுமில்லாம சில
வாரங்களுக்கு முன்னர் தான் நான்
எழுதிய ” ஏலே ” படத்தின் என்னுடைய
அனுபவத்தை அக்கா படித்துவிட்டு
அதில் நன்றி சொல்லும் விதமாக
மனித உணர்வுகள் சார்ந்து கமெண்ட்
செய்திருந்தார்,இப்போ என்னோட
முகம் ஞாபகம் இருக்குன்னு சொன்னோன
” தட் கடவுள் இருக்கான் குமாரு “
மொமெண்ட் தான் மைண்ட்ல வந்து போச்சு,

பேக்கரிக்குள் நுழைந்தவுடன் அக்கா
முதலில் பேச ஆரம்பித்தது என்னிடமும்
தனசேகரிடமும் தான்,ஒவ்வொரு
டேபிள்ளாக வந்து பேசுகிறேன் என்ற
அன்பு கட்டளையுடன் அனைவருக்கும்
டீ,காஃபி,மோர் என ஆர்டர் செய்ய
சொன்னார்கள்,மற்றவர்கள் சில
நொறுக்குத்தீனிக்களுடன் ஆர்டர்
செய்ய நானும் தனசேகரும் லெமன் டீ
ஆர்டர் செய்தோம்,அக்காவிற்கு சூடான
பிளாக் டீ,

அக்காவை சந்திக்கப்போகும் போதே
நான் அவர்களிடம் என்ன பேச
வேண்டும்,என்ன கேட்க வேண்டும்
என்பதை மிகவும் தெளிவாக யோசித்து
விட்டு சென்றேன்,என்னுடைய
எழுத்துக்களை போலவே என்னுடைய
அவர்களுடனான உரையாடலும்
எதார்த்ததுடன் இருக்க வேண்டும்
என்பதை மட்டும் முடிவு
செய்துகொண்டேன்,ஐந்து நிமிடம்
பேசினாலும் யதார்த்தம் கலந்த
வாழ்வியலை மட்டும் பேச வேண்டும்
என்பதில் தெளிவாகவும் இருந்தேன்,

எனக்கு எதிராக இருக்கையில்
அமர்ந்த அக்காவிடம் ஏலே திரைப்படத்தில்
அப்பாவிற்கும் மகனுக்கும் உள்ள உறவை
திரைக்கதையாக எழுதிய அனுபவம் பற்றி
கேட்டேன்,நீங்கள் ஒரு பெண் உங்களுடன்
பிறந்த சகோதரர்கள் இருக்கின்றார்களா
என தெரியவில்லை ஆனால் மகன் அப்பா
ஆகிய இருவர் உறவின் அனுபவம் உங்கள்
வாழ்வில் நடந்ததா இல்லை எங்கோ கேட்ட
கதையின் தாக்கமா என்று கேள்வியாக
முன் வைத்தேன்,

ஹலீதா அக்கா உடன் பிறந்தவர்கள்
ஒரு அக்கா மட்டுமே,இந்த கதையின்
தாக்கம் அவர்கள் அப்பாவின்
குணநலமும் மற்றும் அவர்களின்
நண்பர் ஒருவர் தன் அப்பாவிடம்
ஒரே வீட்டில் இருந்தும் பல வருடங்களாக
பேசாமல் இருந்தார் எனவும்,இப்படி மனித
உணர்வில் இருந்து பல துணுக்குகள்
ஏலே திரைப்படத்திற்காக கிடைத்தன
என்று அக்கா பதில் அளித்தார்கள்,
இதை வார்த்தைகளில் என்னால்
விவரிக்க முடியுமா என்றால்
சந்தேகமே,இந்த ஒரு கேள்வியை
நான் அக்காவிடம் கேட்கும் போது
எனக்குள் இருந்த கதை சொல்லும்
மனிதன் எட்டிப்பார்த்தான்,அவங்க
ஏலே படத்தின் முதல் காட்சியையும்
கடைசி காட்சியையும் இணைத்து
நான் கேள்வி கேட்கும் போது பல
தரப்பட்ட Expressions – இல் நான் கேள்வி
கேட்டதை என்னால் உணர முடிந்தது,
அக்கா என்னிடம் பேசும் போது
அவர்களின் பதிலிலும் சரி
அணுகுமுறையிலும் சரி
அவ்வளவு தெளிவு,பாவம் நான்
பேசுவதை தனசேகர் பார்த்து கொண்டு
மட்டுமே இருந்தான்,தனசேகர்
ஹலீதா அக்காவை உற்சாகப்படுத்திய
படலமும் இங்கே அடுத்து வரும்,

பிறகு ஒவ்வொரு டேபிள்ளாக அக்காவை
பார்க்க வந்த நண்பர்களையும் அவர்கள்
எங்கிருந்து வருகிறார்கள்,எப்படி பயணம்
செய்து வந்தார்கள் கார்,பைக் அல்லது
பேருந்து என எல்லாவற்றையும் நம்ம
வீட்டில ஒருவர் போல் மிகவும் அக்கறை
எடுத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்,

பிறகு அக்காவிடம் பேசிய
ஒவ்வொருவரும் படத்தில்
நடிக்க வாய்ப்பு,இணை இயக்குநருக்கான
வாய்ப்பு என வாய்ப்பு கேட்கும் படலமாகவே
ஒரு கூத்து போல் நடந்து கொண்டிருந்தது,
அதிலும் ஒருவர் எதார்த்தத்தை மீறி
எமோஷனலா சான்ஸ் கேக்க
ஆரம்பிச்சுட்டார்,இது சரியான முறை
அல்ல என்று எங்களுக்கு தோன்றியது,
ஆனால் அக்கா தன் சிரிப்பின் மூலம்
அந்த இடத்தை அழகாக்கி
கொண்டிருந்தார்கள்,அங்கும்
இங்கும் நடந்தும் ஓடியும் அவர்கள்
போட்டோ கேட்டால் போட்டோ
எடுத்துக்கொள்வது,சலிக்காமல் எல்லா
விதமான கேள்விகளுக்கும் தன்னிடம்
இருக்கும் உண்மையை மட்டுமே பதிலாக
அளிப்பது என அந்த இடத்தை தன் அன்பின்
மூலம் உணர்த்திக்கொண்டு இருந்தார்கள்,

இதையெல்லாம் நானும்
தனசேகரும் பார்த்து எங்களுக்குள்
பேசிக்கொண்டோம்,அக்கா ஒரு
செலிபிரிட்டி அப்படின்ற இமேஜ்லயே ஏன்
இவங்க பேசுறாங்க..? வாய்ப்புகள் மட்டுமே
கேட்குறாங்களே தவிர அவர்கள் படத்தின்
மூலம் கிடைத்த அனுபவத்தில் இருந்து
எத்தனை விதமான கேள்விகளை
அவர்களிடம் கேட்கலாம் ஆனால் அதை
யாரும் செய்வதாக இல்லை என்று பேசி
பொழுதை போக்கினோம்,

இதில் ஸ்வாரஸ்யமான விஷயம்
என்னவென்றால் ஒரு குரூப்
வந்தாங்க,அதுல ஒருத்தர் எங்க
அண்ணன் அண்ணனுக்கு ஹலிதா
அக்கா படம் எடுக்கப்போறாங்க,
அதான் பேச வந்தோம்ன்னு
சொன்னாங்க,யாருப்பா உங்க
அண்ணன் அண்ணின்னு தனசேகர்
கேட்டான்,எங்க சூர்யா அண்ணன்
ஜோதிகா அண்ணி – ன்னான்,இப்படி
சீன் எங்க அண்ணனுக்கு வைக்கணும்
எங்க அண்ணிக்கு அப்படி சீன்
வைக்கணும்ன்னு சில கட்டளையெல்லாம்
அக்காவிற்கு முன் வைத்தனர்,

கடைசியாக எல்லாரும் கிளம்பியவுடன்
ஒருவர் கிளம்பினார்,ஹலீதா அக்கா
அவரிடம் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று
கேட்க பேருந்தில் என்றார்,அக்கா தன்
டிரைவரை அழைத்து தன் காரில் அவரை
பேருந்து நிலையம் வரை கொண்டு விட்டு
வாருங்கள் என்று சொல்லிய போது மனம்
சொன்னது இவர் செலிபிரிட்டி தான்
ஆனா ,மனுஷன் உணர்வோட ஒன்றிய
பக்குவமும் எளிமையும் பணிவும்
இருப்பதினால் தான் அவரை
எல்லோருக்கும் பிடிக்கிறது என்று,
இது சாதாரண விஷயம் தான்,
ஆனா இது நேர்ல ஹலிதா அக்கா
கூட நம்ம இருக்கப்போ அவங்கல
நம்ம கூடயே வச்சுக்கணும் தோணும்
அப்படி ஒரு உணர்வு ஏற்படும் நமக்கு,

பிறகு யாரிடம் இணை இயக்குநராக
பணியாற்றி இருக்கிறீர்கள்
என்று கேட்டேன்..? புஷ்கர்
காயத்திரி,சமுத்திரக்கனி,
மிஷ்கின் போன்ற இயக்குநர்களிடம்
பணியாற்றியதாக அக்கா கூறினார்,

அப்பாவின் பாசம்,அன்பு என
ஏலேவில் காட்டிவிட்டீர்கள்,அம்மாவை
மையமாக வைத்து படம் இயக்கினால்
நன்றாக இருக்கும் என்று கேட்டதுக்கு
” தூக்கணாங்குருவி” என்ற கதை
இருப்பதாகவும் அது பிற்காலத்தில்
வரும் என்றும் அக்கா சொன்னார்கள்,
அடுத்ததாக ” மின்மினி ” வருமாம்,

இறுதியாக ஹலீதா அக்காவை பார்க்க
வந்த அனைவரும் கிளம்பிவிட்டனர்,மிச்சம்
இருப்பது நானும் தனசேகரும் மட்டுமே,

நான் டீ வேணாம் என்று சொல்லியதால்
தனசேகருக்கு ஒரு மில்க் ஷேக் ஹலிதா
அக்கா ஒரு மோர் என நாங்கள் மூன்று
பேரு மட்டும் உரையாடும் வாய்ப்பு
அமைந்தது ஒரு இருபது நிமிடங்கள்
சுமார்,நான் பூவரசம் பீப்பி பார்க்காத
ஒரே காரணத்தினால் தனசேகர் பூவரசம்
பீப்பி பார்த்த ஒரே காரணத்தை வைத்து
அவர்களிடம் செல்லம் ஆனான்,இருடா
நானும் காது வரைக்கும் பெரிய மீசை
வளக்குறேன் மொமெண்ட்ன்னு அடுத்த
வாரமே படம் பார்த்து அக்காக்கு
விமர்சனம் எழுதி அனுப்புறேன்னு ஒரு
அழகான வாக்குவாதம்,என்ன தான் ஒரு
தாய் மூன்று பிள்ளை (பூவரசம் பீப்பி,சில்லு
கருப்பட்டி,ஏலே ) பெற்றிருந்தாலும் முதல்
பிள்ளை (பூவரசம் பீப்பி) பிறக்கும் போது
ஏற்பட்ட வலியும் சுகமும் கொஞ்சம் தனி
ஸ்பெஷல் தானே,அதுவும் இல்லாமல்
தனசேகர் பேசும் போது அப்படியே
கோயம்பத்தூர் ஸ்லாங் வரும்
(ஏனுங்க,கண்ணு,சாமி) – ன்னு,அந்த
ஸ்லாங் தான் அவனோட ப்ளஸ் மற்றும்
அவன் இருக்க இடத்தை கலகலப்பா
வச்சுக்குறதும் தான்,இப்படி நாங்க ரெண்டு
பேரும் சேர்ந்து ஒரு டைமில் அக்காவையே
தனசேகர் கலாய்க்கும் அளவு போகி
எங்கள் சந்திப்பை மேலும் எதார்த்தமும்
கவித்துவமும் ஆக்கியது,எங்கள் வீட்டிற்கு
அக்காவை அடுத்த முறை டின்னருக்கு
அழைத்திருக்கிறோம் அக்காவும்
வரேன் நேரமிருக்கையில் என்று
சொல்லியிருக்கிறார்கள்,அடுத்த
முறை கோவை வரும் போது நிச்சயமாக
நாம் மீண்டும் சந்திக்கலாம் என்றும்
சொல்லியிருக்கிறார்கள்,அந்த சந்திப்பில்
சினிமா இல்லாத நிறைய அனுபவங்களை
உங்களிடம் பேச வேண்டும் என
சொல்லியிருக்கிறேன் (Philosphy,God,Writing,
Books,Music,Reading,People Mindset,Travel,Loneliness )
என்று,

அக்காவை சந்திக்க வந்த அனைவரும்
வாய்ப்பு தேடியும் படங்கள் பற்றி மட்டுமே
பேசி விட்டு சென்றனர்,ஆனால் நாங்கள்
இருவரும் கடைசியாக அக்காவிடம்
பொதுவா பேசுனப்போ அக்கா விழுந்து
விழுந்து சிரித்ததை பார்க்கும் போது
எங்களுக்கு அளவில்லா சந்தோஷம்,

ஏலே படம் பார்த்துவிட்டு நான்
வாட்ஸாப்பில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவு
செய்திருந்தேன்,அந்த படத்தில்
நடித்திருந்த நடிகை மதுமிதா என்
மனைவி சாயல் என்று சில பேர்
சொன்னார்கள்,இந்த தனசேகரும்
சொல்லியிருந்தான்,இதை தனசேகர்
அக்காவிடம் சொல்ல என் மனைவியின்
ஃபோட்டோவை நான் அக்காவிடம்
காண்பித்தேன்,நீங்க தினமும் அவங்க
கூடவே இருக்கனால உங்களுக்கு தெரியல
போல சாயல் ஒத்துப்போதுன்னு அக்காவும்
சொல்லிட்டாங்க,

எனக்கு அக்காவிடம் பேச வேண்டும்
பழக வேண்டும்,நிறைய பகிர வேண்டும்
என்ற நோக்கம் மட்டுமே,இந்த பந்தம்
தொடர எனக்கு ஆவல் என நான்
அக்காவிடம் சொன்னபோது தொடர்பில்
இருப்போம் என சொன்னார்கள்,

தனசேகரின் பேச்சும் என் எழுத்தும்
மிகவும் பிடித்துப்போனது என அக்கா
சொல்லியவுடன் இந்த சந்திப்பை கூட
நான் எழுத்தில் தான் எழுதி உங்களுக்கு
அனுப்பப்போகிறேன் என் அனுபவத்தை
என்று நான் அக்காவிடம் சொன்னேன்,
என் கடமையை செய்துவிட்டேன் என
நினைக்கிறேன்,

பிறகு அக்கா எங்களிடம் இருந்து விடை
பெற்று காரில் ஏறி சென்றார்கள்,வீட்டிற்கு
சென்றவுடன் Thanks a Lot For Coming,Had a Great
time with u என மெசேஜ் செய்தார்கள்,இந்த
ஒரு மெசேஜ் போதும் அக்கா எங்ககூட
எவ்வளவு தூரம் கனெக்ட் ஆனாங்கன்னு
புரிஞ்சுக்க,

சில வாய்ப்பும் சந்திப்பும் இன்னும்
எத்தனை வருஷம் ஆனாலும்
தேன் மிட்டாய் சுவை போல மனசு
முழுக்க இனிச்சுட்டே இருக்கும்,
அந்த இனிப்போட தன்மையை
நீங்க ரசிச்சுட்டா காலத்துக்கும்
அது தரும் அலாதி பிரியத்திற்கும்
அன்பின் அரவணைப்பிற்கும்
இங்கே அளவு இல்லை,

சில நாட்களாக வெறுமையுடன்
இருந்த என் மனசில் அன்பை விதைத்த
கடவுள் அனுப்பிய தேவதூதம் என் அக்கா,

இங்கு என்னால் எழுதப்பட்ட
அக்காவிற்கான இந்த எழுத்துக்களை
அக்கா படிக்கும் போது POLO மிட்டாய்
சாப்பிட்டு விட்டு தண்ணி குடித்தால்
சும்மா மனசுக்குள்ள ஜில்லுன்னு ஒரு
உணர்வு கிடைக்கும்ல அந்த உணர்வு
அக்காவுக்கு கிடைக்கும்ன்னு நம்புறேன்,

~ லவ் யூ அக்கா
அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி !!!!! ❤️

Related posts

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

Penbugs

பிப். 28-ல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் ஏலே படம்

Penbugs

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரை பாராட்டிய சாய் பல்லவி!

Penbugs

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் ‘ஏலே’ பட டிரைலர் வெளியானது

Penbugs

சில்லுக் கருப்பட்டி – Review

Anjali Raga Jammy

Halitha celebrates Sillu Karupatti’s 50th day with Suriya and Jyothika

Penbugs

Leave a Comment