Cinema Editorial News

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

நாற்பொழுதும் நாழிகை திங்களும்
எனை உங்கள் நெஞ்சில் அரவணைத்தீர்கள்,

பசி என்னும் வார்த்தையை
என் அகராதியில் கூட நான்
பார்க்காமல் இருக்க வழி செய்தீர்கள்,

எனக்கு உயிர்,உடல்,குணம்,மொழி,
செல்வம்,அறிவு என எல்லாமும்
சரி வர கொடுத்தீர்கள்,

உங்கள் கால் வலிக்க மிதிவண்டி மிதித்து
நான் மகிழுந்தில் பயணித்த சுகத்தை
மட்டுமே எனக்கு கொடுத்து எனை
பள்ளிக்கு நீங்கள் கூட்டி சென்றீர்கள்,

மம்மிக்கு தெரியாமல்
எத்தனையோ நாள் எத்தனையோ காலம்
பெருமழை நாளில் ஜில்லான ரோஸ் மில்க்
வாங்கி கொடுத்தீர்கள்,

ஞாயிற்று கிழமையானால்
வாரம் தவறாமல் மதுரை ஸ்பெஷல்
புரோட்டா வாங்கி கொடுத்து எனக்கு
சால்னாவுடன் பிச்சு போட்டு சாப்பிடும்
கலையை கற்றுக்கொடுத்தீர்கள்,

திடீரென ஒரு நாள் தலையை
பிடித்துக்கொண்டு குருதி வடிந்தோட
வீட்டில் உருக்குலைந்து போனீர்கள்,

நானும் மம்மியும் பித்து பிடித்தது போல்
ஏதோ வீட்டின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து
இருந்தோம்,

அடுத்து ஒரு வாரம்
மதுவும் புகையும் உங்களை
எங்களிடம் இருந்து பறித்துக்கொண்டது,

அடுத்த இரண்டு வருடத்தில்
மம்மியையும் சேர்த்து உங்கள் திசைக்கு
வழி காட்டிக்கொடுத்து அவர்களையும்
உங்களுடன் வர செய்து விட்டீர்கள்,

எல்லாமுமாய் நீங்கள்
என் பெரும் நிழலாக
உடன் இருக்க வேண்டிய நேரத்தில்
இறைவனிடம் சென்றீர்கள்,

நான் இன்றும்
நானாகவே இருக்கிறேன்
நீங்கள் சொல்லிக்கொடுத்த
பல நற்பண்புகளுடன்
எந்த தீய பழக்கத்திற்கும் செல்லாமல்,

என் இறுதி மூச்சி
இந்த பூமியில் ஊசலாடும் வரை
உங்கள் சொற்களுக்கு மரியாதை
கொடுத்து தினம் தினம் உங்களை
சுற்றியே என் நாட்களை கடந்து
செல்கிறேன்,

லவ் யூ சோ மச் டாடி
நீங்க தான் எல்லாமே
நீங்க தான் எல்லாமுமே,

Happy Fathers day!

Related posts

Chumma Kizhi from Darbar

Penbugs

Thappad nominated for Best film in Asian Film Awards

Penbugs

செவாலியே சிவாஜி கணேசன்

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

Penbugs

Tovino Thomas still in ICU, clinically stable

Penbugs

PC Sreeram: Had to reject a film as it had Kangana Ranaut as the lead

Penbugs

Bold and fearless- Happy Birthday, Sunny Leone

Penbugs

Born on this day- August 3, Sunil Chhetri

Penbugs

An ode to Aditi Rao Hydari

Penbugs

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

Penbugs

SPB donates his house to Kanchi Math

Penbugs