கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து கடைபிடித்து வரப்படுகிறது, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் சில கோவில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது, அதன்படி கோவில்களுக்கு ஒரு நாளைக்கு 150 முதல் 500 பேர் வீதம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக அறநிலையத் துறை இணையதளத்தில் தேசிய தகவல் தொடர்பு மையம் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்று முன் பதிவு செய்யப்பட உள்ளது இதற்கான கட்டணம் 50 முதல் 500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அதிகாரி கூறினார்.
படிக்க: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/
மேலும் அவர் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வருகின்ற ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறப்பதாக தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
Toxic environment: The Ellen Show is under investigation