இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு 2017 டிசம்பரில் திருமணம் நடந்தது. காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தை பிறப்புக்காகத்தான் ஆஸி., சுற்றுப்பயணத்திலிருந்து கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் பாதியில் இந்தியா திரும்பினார் விராட் கோலி.
இந்நிலையில், இன்று தனக்கு பெண் குழந்தை பிறந்ததை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் விராட் கோலி.