Cinema

செக் மோசடி வழக்கு: சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு ; ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராதிகாவுக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்வதற்காக, சரத்குமாரின் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது.

செக் மோசடி தொடர்பாக சரத்குமார் மற்றும் ராதிகா மீது வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ஏழு வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஓராண்டும், ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு இரண்டு வழக்குகளில் தலா ஓராண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மேல்முறையீடு செய்யும்வரை, தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூவர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், சரத்குமார், ஸ்டீபன் ஆகியோரின் சிறை தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

Related posts

Bahubali’s Kiliki language to be launched on 21st February!

Penbugs

Dhanush’s Third Flick with Akshay Kumar|AtrangiRe

Penbugs

கதிர்..!

Kesavan Madumathy

Priyanka Chopra wants to see more brown people in Hollywood

Penbugs

Saani Kayidham: Selvaraghavan makes acting debut alongside Keerthy Suresh

Penbugs

I got the idea of 6 packs from Ajith: AR Murugadoss

Penbugs

Eeswaran Movie Review!

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

Karthi-Ranjani blessed with baby boy

Penbugs

Viral: Kamal Hassan’s house was labeled with quarantine sticker

Penbugs

COVID19: After donating 25 crores, Akshay Kumar donates 3 Crores now!

Penbugs

Leave a Comment