Cinema

“மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா”

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பங்கேற்ற கலந்துரையாடலில், அவரது அடுத்த படமான மூக்குத்தி அம்மன் படம் குறித்து மனம்திறந்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் திரையரங்கில் வெளியான பின்னரே ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கும் பட்சத்தில் முதல் படமாக மூக்குத்தி அம்மன் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

நயன்தாரா பற்றிய கேள்விக்கு, தான் இதுவரை நடித்த நாயகிகளுள் மிகவும் ஒழுக்கமான நடிகை அவர், அதனாலேயே ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த துறையில், அவர் தனித்து நிற்கிறார் என்று கூறியிருக்கிறார்.

படத்தை முதலில் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது.

ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி நடிக்க, சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இதில், ஸ்மிருதி வெங்கட், ஊர்வசி, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். கிரிஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது ‌‌…

Related posts

MAARI’S AANANDHI FROM MAARI 2

Penbugs

Abhirami and Losliya to do a film together!

Penbugs

Ponmagal Vandhal[2020]: An affecting drama that garners a brave feat

Lakshmi Muthiah

Happy Birthday, Keerthy Suresh!

Penbugs

Actor Sindhuja’s Kambalipoochi

Penbugs

Bahubali’s Kiliki language to be launched on 21st February!

Penbugs

Golden Globes 2020: The full list of winners

Penbugs

COVID Heroes: Sonu Sood honoured with Life-Size statue at Durga Puja Mandal

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

Selena Gomez’s Rare Beauty announces $100M Impact Fund for mental health services

Penbugs