Coronavirus Editorial News

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்கி, ரயில்வே நேற்று, 100 சதவீத சாதனை படைத்தது. கொரோனா பரவலைத் தடுக்க, மார்ச், 25ல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், மெயில், எக்ஸ்பிரஸ், மெட்ரோ, புறககர், பயணியர் என, அனைத்து விதமான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சிறப்பு ரயில்இதன்பின், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதற்காக, மே, 1ம் தேதி முதல், தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களை, ரயில்வே இயக்கி வருகிறது. இதன்பின், மே, 12ம் தேதி முதல், டில்லியிலிருந்து, 15 முக்கிய நகரங்களுக்கு, 15 ஜோடி சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல், ரயில்வே, முக்கியமான தடங்களில், 100 ஜோடி ரயில்களை, தினசரி அட்டவணைப்படி இயக்கி வருகிறது.

கொரோனா பரவல் குறையாததால், மற்ற ரயில் சேவைகள் அனைத்தையும், ஆகஸ்ட், 12ம் தேதி வரை, ரயில்வே தடை செய்துள்ளது.ரயில்வே, நாடு முழுதும், தினமும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்களை இயக்கி வந்த நிலையில், இப்போது, 230 ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது. அதாவது, 2 சதவீத ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது.உத்தரவுஇந்த, 2 சதவீத ரயில்களும், குறித்த நேரத்தில் புறப்பட்டு, குறித்த நேரத்தில், அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும் என, மண்டல அதிகரிகளுக்கு கடந்த மாதம், ரயில்வே உத்தரவிட்டது.இந்நிலையில், நேற்று, அனைத்து ரயில்களையும், குறித்த நேரத்தில் இயக்கி, 100 சதவீத சாதனையை ரயில்வே படைத்துள்ளது. இதற்கு முன், கடந்த, 23ம் தேதி, ஒரு ரயிலைத் தவிர, மற்ற ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

Related posts

Genelia, Riteish pledges to donate their organs!

Penbugs

Officials build wall to hide slums from view when Trump visits

Penbugs

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

15YO sets herself on fire after being filmed by youths while bathing

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

COVID19: Kanika Kapoor tests positive for 5th time

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs