ஜூம் (ZOOM) செயலி தனி நபர்கள், அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உகந்ததல்ல என சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. அது பாதுகாப்பான தளம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் கடந்த ஒரு மாத காலமாகப் பயன்படுத்திவரும் மிக முக்கிய செயலி ஜூம் (ZOOM) ஆகும். காணொலிக் கூட்டம், தனியாக சாட் செய்வது, மெசேஜ் அனுப்புவது, ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்தச் செயலி எளிதாகப் பயன்படுவதால் பலரும் இதை விரும்பி டவுன்லோடு செய்தனர்.
சென்னை காவல்துறை அதிகாரிகளே தங்களுக்குள் ஜூம் செயலி மூலம் தகவல் பரிமாறிக்கொள்வதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் அந்த செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் முடிந்தவரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது…!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!