Penbugs
Editorial News

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில்ல் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் உடலை தனது தோளில் கண்ணீருடன் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் ராம் குஞ்சம் என்ற ராணுவ வீரர் சீன தாக்குதலி்ல் வீரமரணம் அடைந்தார். கான்கேர் மாவட்டம், கிதாலி குருதோலா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ராம், கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக ராணுவத்தில் இருந்து வந்தார். இந்த தாக்குதலில் கணேஷ் ராம் வீரமரணம அடைந்ததையடுத்து, அவரின் உடல் விமானம் மூலம் ராய்ப்பூர் நகருக்கு நேற்று வந்தது.

வீமரணம் அடைந்த கணேஷ் ராம் உடலுக்கு மரியாதை செலுத்த விமான நிலையத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் காத்திருந்தார். விமானத்தில் இருந்து கணேஷ் ராம் உடல் இறக்கப்பட்ட உடன், தான் மாநில முதல்வர் என்றும் பாராமல், ராணுவ அதிகாரியை விலக்கிவிட்டு, முதல்வர் பூபேஷ் பாகல் கணேஷ் ராம் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தனது தோளில் சுமந்து சென்றார். இந்த காட்சியைப் பார்த்த மற்ற அதிகாரிகள் நெகிழ்ந்து போயினர்.

அதன்பின் விமான நிலையத்தில் கணேஷ் ராம் உடலுக்கு மலர்வளையம் வைத்து, முதல்வர் பூபேஷ் பாகல் மரியாதை செலுத்தினார். அதன்பின் தனி ஹெலிகாப்டர் மூலம் கணேஷ் ராமின் சொந்த கிராமத்துக்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கணேஷ் ராம் வீரமரணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் பூபேஷ் பாகல், “ கணேஷ் ராம் நினைவாக, கிதாலியில் உள்ள பள்ளிக்கு அவரின் பெயர் சூட்டப்படும். கணேஷ் ராம் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பி்ல நிவாரணமாக ரூ.20 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும்” என அறிவித்தார்

Related posts

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில் திடீர் ஆய்வு

Penbugs

கவுதம் கம்பீருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Penbugs

PM Modi calls for all-party meeting to discuss Ladakh situation

Penbugs

Murdered teen paid moving tribute by his soccer teammates in Mexico

Gomesh Shanmugavelayutham

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs