Coronavirus

24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் திருப்பி அனுப்பப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஐசிஎம்ஆர் ஆணையின்படி 24,000 விரைவு பரிசோதனைக் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுகிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கரோனா நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. இந்நோய் தொற்றில் இருந்து மக்களை காத்து, உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை மேற்கொள்ள உலகமே போட்டிப் போட்டுக் கொண்டு ரேபிட் டெஸ்ட் கிட்களை (Kits) அதிக அளவில் வாங்க முயற்சித்துக்கொண்டு இருந்த தருணத்தில் ICMR அமைப்பு, தன்னுடைய 2.4.2020 தேதியிட்ட ஆணையில், Anti Body based Rapid Test (RAT) செய்யப்படுவதற்கு அனுமதி அளித்தது. ஐசிஎம்ஆர் (ICMR) மருத்துவ சோதனை கருவிகளை தர ஆய்வு செய்து “ரேபிட் டெஸ்ட் கிட்களை” எங்கே வாங்கலாம், யாரிடம் வாங்கலாம், என்பதை முடிவு செய்து அதனை மாநில அரசுகளுக்கு அறிவுரையாக வழங்கியது. இக்கிட்களை வாங்குவதற்கு ஐசிஎம்ஆர் நிறுவனம், 7 நிறுவனங்களை தெரிவு செய்து பட்டியலிட்டுள்ளது.

இந்த கிட்களை விற்பனை செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் (Manufacturer) பட்டியலையும் வெளியிட்டது.

இதில் உள்ள Wondfo நிறுவனம், இந்தியாவில் இப்பொருள்களை விற்பனை செய்வதற்காக, Cadilla Pharma மற்றும் Matrix Lab என்ற இருநிறுவனங்களை இறக்குமதி ஏஜன்டுகளாக (Importer) நியமித்தது. இந்த இரு நிறுவனங்களும், தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல விற்பனை நிறுவனங்களுக்கு (Dealer) அனுமதியளித்துள்ளன. இவற்றுள் Aark Pharmaceutical, Shan Biotech, Rare Metabolics உள்ளிட்ட பல dealer நிறுவனங்களும் அடங்கும். மத்திய அரசின் ICMR அமைப்பு 5 இலட்சம் கிட்கள் வாங்க Aark Dealer நிறுவனத்திற்கு, கிட் ஒன்றுக்கு வரிகள் நீங்கலாக 600 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்வதற்காக ஆணைகளை வழங்கியது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் ICMR அனுமதியளித்த அதே நிறுவனத்தின் (Wond fo) கிட்களுக்கு, மத்திய அரசு அளித்த அதே விலையில் (ரூ.600, வரிகள் நீங்கலாக) Shan Bio-Tech என்ற ஒரு dealer நிறுவனத்திற்கு, தமிழக அரசு கொள்முதல் ஆணைகளை வழங்கியது.

மத்திய அரசின் ICMR அமைப்பின் அனுமதி, குறிப்பிட்ட மருத்துவப் பொருள்களுக்கான அனுமதி (Product approval) ஆகும். எனவே இதில் கிட்களை உற்பத்தி செய்யும் Wondfo நிறுவனத்தின் பெயர் மட்டும் இருக்கும். Importer மற்றும் Dealer நிறுவனங்களின் பெயர் எப்போதும் இடம் பெறாது. இதனைக்கூட புரிந்துகொள்ளாமல், Shan Bio-Tech நிறுவனத்தின் பெயர் ICMR பட்டியலில் இல்லை எனக்கூறுவது அபத்தமானது. அப்படிப்பார்த்தால், இந்தியாவில் எந்த ஒரு மாநிலம் வாங்கிய எந்த ஒரு Dealer நிறுவனத்தின் பெயரும் அந்தப் பட்டியலில் இருக்காது. ஏனென்றால், Wondfo நிறுவனத்தின் கிட்களை இறக்குமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட 2 importer நிறுவனங்களின் dealer மட்டும் தான் இந்த கிட்களை கொள்முதல் செய்ய முடியும். மத்திய அரசின் ICMR, பிற மாநில அரசுகளும் னநயடநச நிறுவனங்களிடமிருந்து மட்டும் தான் இந்த (Wonderfo) கிட்களை கொள்முதல் செய்துள்ளன. ஒரு சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமலேயே, அவசர கோலத்தில் அறிக்கையை அள்ளித் தெளிக்கும் எதிர் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ICMR அமைப்பு 2.4.20 அன்று ஒப்புதல் வழங்கும் நேரத்தில், Rapid Test கிட்களைப் பயன்படுத்தி, உடனடியாக அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துக் கட்சியினரும் கோரினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு இவற்றை வாங்கிய சூழலில் (i.e., when the demand is high), இவற்றை வாங்குவதே கடினமாக இருந்தது. ஆனால், அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு மக்களின் உயிர் காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் Tender Transparency சட்டத்தின் பிரிவு 16 (A)ன் படி ICMR ஆல் அறிவிக்கை செய்யப்பட்ட Wondfo நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட Dealer ஆன Shan Biotechக்கு ஆணை வழங்கப்பட்டது. இதே காலகட்டத்தில், ஆந்திரஅரசு 730 ரூபாய்க்கும், கேரளஅரசு 699 ரூபாய்க்கும் ICMR அமைப்பே தனது இரண்டாவது கொள்முதல் 795 ரூபாய்க்கும் கொள்முதல் ஆணைகள் அளித்தபோதும், தமிழ்நாடு அரசு 600 ரூபாய்க்கு மட்டுமே ஆணை வழங்கியது. ஆனால், அந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை எல்லாம் மலிவான அரசியலாக்கவில்லை. அரசின் உயிர் காக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தனர் என்பது தான் உண்மை.

ICMR ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பெற்றுள்ள 24,000 கிட்களும் திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே இதில் தமிழ்நாடு அரசுக்கு எந்த ஒரு செலவினமும் ஏற்படவில்லை. இது தவிர, எஞ்சியுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் ICMR ஆணையின்படி ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க, „மக்களின் பொதுச் சொத்தான கருவூலத்தைக் கரையான் அரிக்கும் காரியம்‟ என கூறியிருப்பது ஒரு பொய்ப் பிரச்சாரத்தின் வெளிப்பாடு ஆகும். மேலும், மக்களின் உயிர் காக்கும் அஇஅதிமுக அரசை, “600 ரூபாய் கொடுத்தது ஏன்?” என மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளது, மிகவும் விந்தையாக உள்ளது. இந்த பொய்ப்பிரச்சாரங்கள் தமிழ்நாடு அரசின் மீது சேற்றை வாரி இறைக்க மட்டுமே பயன்படுமே தவிர, போர்க்கால அடிப்படையில் கரோனா நோய்த்தொற்றை அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசின் உத்வேகத்தை ஒருநாளும் குறைக்க இயலாது.

மேலும், தமிழ்நாடு அரசு தான் தேவையான அனைத்து மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் முறைப்படி கொள்முதல் செய்து, மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கி வருகின்றது. அதனால் தான் இன்றைக்கு கரோனா நோயில் இருந்து பூரண குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை, அதாவது 56.8% நபர்கள் குணமாகி வீடு திரும்புவது நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது. அதேபோன்று, இறப்பு விகிதம் 1.2% ஆக மட்டுமே உள்ளது.

போர்க்கால அடிப்படையில் கரோனாநோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசியல் விளம்பரத்திற்காக அறிக்கை போர் நடத்த உகந்த நேரமா இது என்பதை அரசியல் கட்சிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசின் மீது தொடர்ந்து உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அரசியல் லாபம் அடைய முயற்சி மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

COVID19: Rohit Sharma donates Rs 80 Lakhs

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

You gave us mini heart attack: Sports Minister Kiren Rijiju to PV Sindhu’s post

Penbugs

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

Norway PM fined by Police over COVID violations

Penbugs

COVID19: Yogi Babu donates rice bags

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs