Coronavirus

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சென்னை மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதி இல்லை என்பதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுவதாக, நடிகரும், செய்தி வாசிப்பாளரான வரதராஜன் தகவல் வெளியிட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

செய்திவாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் இதுதொடர்பாக ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், எனக்கும் எனது தம்பிக்கும் இன்று காலை ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ வெளியிடுகிறேன்.

எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர். அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. திடீரென காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மூச்சுத் திணறல் பிரச்சனையும் இன்று காலை முதல் திடீரென ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டோம். ஆனால் சென்னையில் எந்த ஒரு பெரிய மருத்துவமனையிலும், கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு படுக்கை வசதி இல்லை.

அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஒரு படுக்கை கூட இல்லை.மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறி மேலும் சில கருத்துக்களை வரதராஜன் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வந்தது.

இன்று மதியம் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான படுக்கை வசதி உள்ளது. இங்கேயுள்ள நிருபர்கள் இப்போதே கூறுங்கள். பத்திரிக்கையாளர்களில் எத்தனையோ பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதே. யாருக்காவது படுக்கை வசதி இல்லாமல் துன்பத்தை அனுபவித்தீர்களா? இங்கேயே சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்

வரதராஜன் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை. வரதராஜன் மீது தொற்று நோய் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற மோசமான ஒரு காலகட்டத்தில் வதந்தி பரப்புவோரை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. பெருந்தொற்று நோய் சட்டத்தின்கீழ் அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Related posts

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs