Cinema Coronavirus Inspiring

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

கொரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் கொடுத்த யோசனையின் பேரில்
கொரோனா அதிகம் பாதிகப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக அந்த பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன‌.

அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை அஜித்தின் அறிவுரையின் பேரில் உருவாக்கியுள்ளனர். இதனைக் கொண்டு அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவில் கிருமி நாசினிகளை தெளித்து விடலாம்.

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா ட்ரோன்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு – களப்பணியில் நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழு சிறப்பாக செயல்படுவதாக கர்நாடகாவின் துணை முதல்வர் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ‘தக்‌ஷா’ என்னும் மாணவர்களின் ஆராய்ச்சி குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகாராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தக் குழு பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப் படைத்தது. பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது குறிப்பிடதக்கது.

Related posts

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

Mahat-Prachi’s wedding reception

Penbugs

அன்பான சூர்யாவுக்கு !!

Shiva Chelliah

In pics: Amala Paul ties knot with Bhavinder Singh

Penbugs

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

சில்லுக் கருப்பட்டி – Review

Anjali Raga Jammy

Watch: Sarkar teaser is here

Penbugs

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

Michael Tamil Short Film[2020]: A poignant story that treads on hope

Lakshmi Muthiah

Rajinikanth receives Icon of Golden Jubilee award

Penbugs

A R Murugadoss gave credits to Varun Rajendran

Penbugs