பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது.
அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண உடல்நலத்துடன் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். நீங்கள் எனக்காக பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் நன்றி. உங்களின் டில் தேவானா ஹீரோ பிரேம், லவ் யு சார், என பதிவிட்டுள்ளார்.
Toxic environment: The Ellen Show is under investigation