ரஜினி பெயரில் கடந்த சில நாள்களாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்தநிலையில், அந்த குறித்து
ரஜினி இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் விளக்கமளித்திருக்கிறார். ரஜினி பெயரில் சமூக வலைதளங்களில் சுற்றும் அந்த அறிக்கையில், “என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.
மேலும், “கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்’’ என்று ரஜினி தெரிவிப்பது போல் அந்த அறிக்கையில் தகவல் இடம்பெற்றிருந்தது.
அந்த அறிக்கை குறித்து இன்று ரஜினி அவர்கள் தனது டிவிட்டர் பதிவில் விளக்க அளித்துள்ளார் அதன்படி
எனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், தன்னுடையது அல்ல – ரஜினிகாந்த்
தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் – ரஜினிகாந்த்
சமூக வலைத்தளத்தில் பரவும் கடிதத்தில், தன்னுடைய உடல்நிலை, மருத்துவர்கள் ஆலோசனை பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையே – ரஜினிகாந்த்
என்று குறிப்பிட்டுள்ளார்.
Parvathy calls out misogyny in Arjun Reddy in front of Vijay Devarakonda