Editorial News

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் இன்று (11/12/20) அதிகாலை மரணமடைந்தார்.

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 இல் வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.


மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு தினசரி இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய், மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை, குறைந்த விலையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்படுவதால் தினசரி நூற்றுக்கணக்கானோர் சாந்தி கியர் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.


இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சுப்ரமணியம் மறைவால் கோவையைச் சேர்ந்த மக்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

முடங்கியது யூ டியூப் பயனர்கள் அவதி

Penbugs

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

Vi unveils a collaborative program to offer a range of customer benefits for Learning & Upskilling, Health & amp; Wellness, and Business Help

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

காலாவதி ஆன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும்

Penbugs

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

PM Modi, CM Edappadi condole actor Vivekh’s demise

Penbugs

IPL 2020, Match 1, MI v CSK – Du Plessis, Rayudu take CSK home

Penbugs

Leave a Comment