Editorial/ thoughts

பிரபாகரம் மறையாது!

“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை .

65 ஆம் அகவை தினம் கொண்டாடும் எம் அன்னைக்கு தன் பிள்ளைகளின் வாழ்த்துகள்!!!

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி’ என்று தனது டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.”எனது தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் மாறினால் எனது பாதுகாவலரே என்னை சுட்டுக் கொல்லலாம்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர் பிரபாகரன் .

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன.

 

பிரபாகரன் ஒழுக்கமிக்கவர், கட்டுப்பாடுமிக்க தலைவர் என்று ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழாரம்! ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் நம் தலைவராவார். மறம் காட்டி நின்றாலும் இறுதிவரை களத்திலே அறம் போற்ற நின்றார் அவர்.

விடுதலை என்பது விற்பனைப் பண்டம் அல்ல. அது உயிரையே விலையாகத் தந்து போராடிப் பெறுகிற புனித உரிமை’, என்பதைத் தெளிவாக உணர்ந்து, ‘உயிர் உன்னதமானது; ஆனால், அதனினும் உன்னதமானது எமது உரிமை; விடுதலை; கெளரவம்’ என வீரமுழக்கமிட்டு, உயிரை ஒரு குப்பியில் அடைத்து தன் கழுத்திலேயே தொங்கவிட்டு, விடுதலைத்தாகம் கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக, கடலுக்கும், கரைக்குமாக ஆறு படைகள் கட்டிக் களத்தில் பாய்ந்து, உலகமே ஒற்றை அணியில் தனக்கு எதிராய் நின்றாலும் அதனை எதிர்த்து உள்ளம் தளராது, தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன்னலமற்றுக் களத்தில் நின்ற ஒப்பற்ற மாவீரன்.

போர்விதிகளுக்கு மாறாகத் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுக்குண்டுகளையும் சிங்கள இனவாதிகள் பயன்படுத்தியபோதும், கண்ணசைத்தால் கணநொடியில் எதிரிக்குக் கல்லறை கட்டிவிடும் கரும்புலிகள் தன்னிடம் இருந்தும், ‘தனக்கு எதிரி சிங்கள இராணுவம் தானே ஒழிய, சிங்கள மக்கள் அல்லர்’ என்றறிவித்து அறம் காத்த பெருந்தலைவர் அவர்.

தாய்மொழிக்கல்வியும், சாதியற்ற சமூகமும் நமக்கெல்லாம் இங்கே கனவாகவே இருக்கின்றன. ஆனால், தான் உருவாக்கிய ஈழத்திருநாட்டில் தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழிக் கல்விக்கூடங்களை நிறுவி, மருத்துவக் கல்வி முதல் இராணுவக் கட்டளைகள்வரை அனைத்தையும் தமிழ் மொழியிலேயே தந்தவர்.

தமிழ்த்தேசிய இனத்தின் பெரும் சாபமாய்க் காலங்காலமாய் நம்மைத் தொடர்ந்து வருகிற சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய சமதர்மச் சமூகத்தைப் படைத்துக் காட்டியவர் நம் தலைவர்.

“பெண் விடுதலை என்பது, அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதாரச்சுரண்டல்
முறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதாகும்”

ஆணுக்குப் பெண் சமம் என இந்த உலகத்திற்கு அறிவித்து நடைமுறைப்படுத்தியவர் நம் தலைவர்!

மீண்டும் எம் அன்னைக்கு அகவைநாள் வாழ்த்துகள்

வாழ்க பிரபாகரம்!
வெல்க தமிழீழம்!

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்!

Related posts

“சதையை மீறும் மூன்றாம் பாலினம்”

Shiva Chelliah

The Cemetery in Barnes | Book Review

Aravindakshan

World Tea Day..!

Shiva Chelliah

Is hair in food a health risk?

Penbugs

Periyar !

Penbugs

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy

A lullaby for Asifa

Penbugs

Ban Sterlite or Blast People

Penbugs

Airport Emotions

Penbugs

The Proposal

Penbugs

IT HAS BEEN A YEAR SINCE HER DEATH!

Penbugs

Ban Banner!

Kesavan Madumathy