சரித்திர கதைகள், சமூக கதைகளாக மாறிய பிறகு கதை நாயகர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உருவான காலத்தில் இயக்குனராக வந்தவர் கேபி..!
எம்ஜிஆர், சிவாஜி என ஹீரோக்களுக்கு தனித்தனி இயக்குனர்கள் கதைகள் எடுத்து அந்த படங்கள் ஜெயித்த காலத்தில், இயக்குனரின் படங்கள் என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கேபி..!
பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்குமிழி. காமெடி நடிகராக இருந்த நாகேஷ் மற்றும் மேஜர் சுந்தர் ராஜனை வைத்து இப்படத்தை இயக்கி இருப்பார்.அவரின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வாரு கோணத்தில் நிஜவாழ்வியல் சம்பவங்களை கொண்டு இருக்கும்…!
அந்த மாறுபட்ட கதையம்சங்கள்தான் அவருக்கு வெற்றியையும் , அவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியது…!
80 களில் பாலசந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, மரோசரித்ரா, தண்ணீர் தண்ணீர், சிந்துபைரவி, ருத்ர வீணா, மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் எனப் பல படங்கள் பெண்களை மையப்படுத்தி இருந்தது. பெண்ணியம் என்பதின் ஆணி வேரை அற்புதமாக திரையில் கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல் அதற்கு வந்த எதிர் விமர்சனங்களையும் தயங்காது எதிர் கொண்டார், அந்த காலகட்டத்தில் அவரின் கதைப் பேசிய கருத்துக்களும் அவரின் கண்ணோட்டமும் நம்மால் நினைத்து பார்க்க கூட இயலாத ஒன்று…!
தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான அவரின் நம்பிக்கை அதோடு தான் என்ன நினைக்கிறறோ அதை தன் படத்தின் நடிகர் ,நடிகைகளிடம் இருந்து பெற்று அதை திரையில் அச்சு பிசகாமல் காட்டியவர் கேபி..!
கேபியிடம் ரசிக்கபட வேண்டிய ஒன்று அவர் படங்களில் வரும் பாட்டுகளை அவர் கையாளும் விதம் ஒரு பாட்டு கூட கதைக்கு தேவையில்லாமல் இருக்காது கதையின் ஓட்டம்தான் முக்கியம் அதற்கு என்ன வேண்டுமோ அதைதான் பயன்படுத்துவார் கமர்சியல் எலிமண்ட்ஸ் பற்றி எல்லாம் கேபி கவலைப்படாத ஒன்று ..!
பாரதியாரின் தீவிர ரசிகரான கேபி தன் படங்களில் முடிந்தவரை அவரின் பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் …!
அபூர்வ ராகங்கள் ,சிந்து பைரவி ,புன்னைகை மன்னன் ,நினைத்தாலே இனிக்கும் ,உன்னால் முடியும் தம்பி , அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிவப்பு , இந்த படங்களும் இந்த படத்தின் பாடல்களும் என்றும் நினைவில் நீங்காதவை ..!
கேபியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னை அப்டேட் செய்து கொள்வது சினிமாவில் இருந்து மக்கள் டெலிவிஷனை நோக்கி படையெடுத்த போது தான் ஒரு பெரிய இயக்குனர் என்று எல்லாம் பாராமல் சின்னத்திரையிலும் தனது முத்திரையை படைத்தார் …!
அண்ணாமலை , திருமலை , சாமி , ரோஜா , மர்மதேசம் என தயாரிப்பிலும் ஆள் கெட்டி….!
சிந்து பைரவி பாட்டுகளை பற்றி குறிப்பிடும்போது ராஜா சொன்னது நான் இந்த மாதிரி பாட்டு போடனும்னா கேபி மாதிரி ஒருத்தர் கதையோடு வந்தாதான் முடியும் என்று அதுவே கேபி …!
அவரின் மோதிர கையால் குட்டுபட்டவர்கள் ஏராளம் என் நினைவில் இருப்பவர்களில் சிலர் :
நடிகர்கள்: ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன்….!
நடிகைகள்: சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, ‘கல்கி’ ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன்…!
என்றுமே கேபி இந்திய சினிமாவின் பீஷ்மர்தான்…!
பின்குறிப்பு : கேபியின் பெரும்பான்மையான கதைகளில் முக்கோண காதல் அமைந்து இருக்கும் இருந்தும் ஒவ்வொரு படமும் தனித்து இருக்கும் …!
அமரர் கேபியின் நினைவுநாள் இன்று ..!
Toxic environment: The Ellen Show is under investigation