Cinema

அடுத்த படம் மகேஷ்பாபுவுடன் : ராஜமவுலி அறிவிப்பு

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரையும் வைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இந்தப்படத்தின் முக்கால்வாசி பணிகள் முடிவடைந்து, வரும் 2021 ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் தனது அடுத்த படத்தில் மகேஷ்பாபுவுடன் கூட்டணி சேர இருப்பதாக அறிவித்துள்ளார் ராஜமவுலி. ஒரு பிரபல சேனலுக்கு இன்று அவர் அளித்துள்ள பேட்டியில் மகேஷ்பாபுவுக்காக தான் ஸ்கிரிப்ட் தயார் செய்து வருவதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார்..

பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இவர்கள் எல்லோருமே இயக்குநர் ராஜமவுலி நம்பர் ஒன் ஸ்தானத்திற்கு வரும் முன்பே ஏற்கனவே ஒருமுறை அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் தான்.. இப்போது இரண்டாம் முறையாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து பிரமாண்ட படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபு இப்போதுவரை ராஜமவுலியின் டைரக்சனில் நடிக்காதது அவரது ரசிகர்களின் பெரும் மனக்குறையாக இருந்து வந்தது. ராஜமவுலியின் இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் மிதக்கிறார்கள் மகேஷ்பாபு ரசிகர்கள்.

Related posts

Glittering Nayanthara Bags Two Awards | Zee Cine Awards 2020

Penbugs

Sammohanam [2018]: An altruistic, genuine effort that graciously ushers in the mindfulness

Lakshmi Muthiah

Saani Kayidham: Selvaraghavan makes acting debut alongside Keerthy Suresh

Penbugs

Yashika Aannand makes her serial debut

Penbugs

Gully Boy is India’s entry to Oscar 2020

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

Rajinikanth clears about his deleted video

Penbugs

Hrithik and Saif to star in remake of Vikram Vedha

Penbugs

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப்குமார்!

Shiva Chelliah

People should deal it with some sensitivity: Anushka Shetty on wedding rumours

Penbugs

AL Azhagappan reveals the reason for the divorce of AL Vijay and Amala Paul!

Penbugs

Thangar Bachan: An alcove in the garden of Tamil cinema

Lakshmi Muthiah