கொரோனாவில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டு தனிமையில் இருந்த நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 2 மணி அளவில் மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், உடல் சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்தாகவும் அவர் நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணிகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
