முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி இருந்ததாக அந்த வீட்டை அரசுடைமை ஆக்கியது தொடர்பான ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 22ஆம் தேதி இதுதொடர்பாக ஆளுநரால் வெளியிடப்பட்ட அவசர சட்டம் குறித்த அரசாணை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படுவதாகவும், அதன் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள் 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழுகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன. 29, டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
