Penbugs
Editorial News

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழக காவல்துறை பெண்களின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சர்ட்டில் பகிர்ந்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்ஃபர்மேஷன் சட்டம் 2000, பிரிவு 67, 67-ஏ , 67-பி மற்றும் இந்திய தண்டனை சட்டம் ( ஐ.பி.சி)யின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். புகார் தருவர், பாதிக்கப்பட்டவர் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.

போலீசுக்கு தகவல் சொல்ல உதவி எண் 112155260 (காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை) என்கின்ற எண்ணில் தகவல் சொல்லலாம்.அதே போல 112 என்ற போலீஸ் எண்ணுக்கும் தகவல் சொல்லலாம்.

Picture: Google Images

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

பேருந்தில் காவல் துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs