Penbugs
Cinema

சென்னையின் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது

சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது .

1970-களில் ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக கட்டப்பட்ட திரையரங்கம் தான் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். ஏ.வி.எம் ஸ்டூடியோவின் அருகிலேயே வடபழனி சாலையில் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது.

இன்றளவும், நியாயமான விலையில் சினிமா டிக்கெட்டுகளை வழங்கி வரும் திரையரங்குகளில் ஒன்று இது. கால மாற்றத்துக்கு ஏற்றபடி உட்கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வந்தபோதும் அதைக் காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்தியதில்லை. இன்றுவரை , அரசு நிர்ணயித்த தொகையையே டிக்கெட் கட்டணமாக வசூலித்து வருகிறது.

சென்னை நடுத்தரக் குடும்பங்களின் திரையரங்கத் தேர்வில் முதன்மையானதாக இருந்து வந்த ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்படப் போகும் செய்தியால் சென்னைவாசிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதோடு தங்களின் திரையரங்க நினைவுகளை டிவிட்டரிலும் , பேஸ்புக்கிலும் தொடர்ந்து பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

Related posts

Throwback: STR on handling breakups, “I used to cry till I get tired”

Penbugs

Krishna and His Leela [2020]: The unbearable weight of a man’s love and his pursuit of decisiveness

Lakshmi Muthiah

Archana Kalpathi, an epitome to “down to earth”

Penbugs

Genda Phool credits row: No money to drag anyone to court, says singer Ratan Kahar

Penbugs

பந்தயக்குதிரை!

Shiva Chelliah

“மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா”

Kesavan Madumathy

கோடையில மழை!

Shiva Chelliah

Three years of Leela Abraham | Falling in love with Aditi, again!

Penbugs

Rustic folk song, Thalle Thillaley from Viswasam

Penbugs

Shraddha Srinath shares her bitter experience about crowded buses

Penbugs

COVID19: Vijay fan dies during fight with Rajinikanth fan over actors’ donation

Penbugs

Kousalya Khartika becomes first crorepati of Kodeeswari

Penbugs