Penbugs
Cinema

‘எங்கள் சித்தி’ ராதிகா

சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கும் சூழலில் அதையும் மீறித் தம்மை நிலை நிறுத்திய நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் அதில் மிக முக்கியமான நடிகை ராதிகா….!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் வெளிநாட்டு வாழ்க்கை நுனி நாக்கு ஆங்கிலம் என இருந்தவரின் முதல் படமே “கிழக்கே போகும் ரயில்” என்ற கிராமத்து திரைப்படம்…!

பாரதிராஜா ஒரு முறை கூறியது முதல் படத்தில் நடிக்கும்போது நான் பேசாத வசவு சொற்கள் இல்லை ஆனாலும் அந்த புள்ள அமைதியா கேட்டுட்டு நடிக்கும் அதனால்தான் அவ்ளோ உயரம் போனா கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகா நடிச்சே ஆகனும் நான் உறுதியா இருந்ததே அவளின் வளர்ச்சினு இயக்குனர் இமயமே சொல்றார்னா அதுதான் ராதிகாவின் உழைப்பு…!

இன்று போய் நாளைவா மாதிரி வெகுளியாகவும் நடித்து அதே நேரத்தில் பல படங்களில் தைரியமான பெண்ணாகவும் நடிப்பார் அதுதான் நடிகவேளின் ரத்தம்…!

திரையில் கேப்டனுடன் அதிகம் படம் நடித்தவர் , தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் எண்பதுகளில் உச்சத்தில் இருந்தவர் சம கால சூப்பர் ஹீரோக்கள் ரஜினி , கமல் , சிரஞ்சீவி என அத்தனை பேருடனும் ஜோடியாக நடித்தவர் ராதிகா ..!

கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் நீதிக்குத் தண்டனை, பாடாத தேனீக்கள், பாசப் பறவைகள், இது எங்கள் நீதி, தென்றல் சுடும் என்று தொடர்ச்சியாக ராதிகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் அவரை அடுத்த படிநிலைக்குக் கொண்டு போனது. கலையரசி என்ற பட்டத்தையும் கலைஞர் அவர்கள் ராதிகாவிற்கு வழங்கி சிறப்பித்தார்…!

பெரிய திரை மட்டுமில்லாமல் சின்னதிரையிலும் வெற்றி கொடி நாட்டியவர் .சித்தி என்ற தொடரின் வெற்றி குறித்து தனியாக ஒரு கட்டுரையே போடும் அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் அதுவும் அப்பொழுது ஏவிஎம், கவிதாலயா போன்ற பழம் பெரும் நிறுவனங்கள் கோலோச்சிய காலமது…!

சித்தி முதல் வாணிராணி வரை அந்த பிரைம் டைம் என்பது ராதிகாவின் ராடான் நிறுவனத்திற்கு மட்டும் என்பதே அவரின் வல்லமை ஒரு நடிகையாக , ஒரு நிறுவனத்தின் தலைவியாக என தொட்ட இடமெல்லாம் தன் விடா முயற்சியில் வெற்றி கண்டவர்….!

ராடான் நிறுவனம் மூலம் பல துணை நடிகர்கள் , தற்போது பெரிய திரையில் சிறப்பாக இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் , நடிகர்களுக்கும் ஒரு புது வெளிச்சத்தை தந்தவர் ராதிகா…!

ராதிகா என்றால் என்னுடைய தனிப்பட்ட விருப்பமான ஐந்து படங்கள் :

  • சிப்பிக்குள் முத்து
  • இன்று போய் நாளை வா
  • ஜீன்ஸ்
  • கிழக்கு சீமையிலயே
  • கேளடி கண்மணி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராதிகா மேடம்…!

Related posts

செக் மோசடி வழக்கு: சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு ; ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

Penbugs