Penbugs
Cinema

பந்தயக்குதிரை!

சிங்கத்தோட தலைமையில
அந்த காடே அதிர்ந்து கொண்டிருந்த
நேரம் அது ராஜ வாழ்க்கையில,

சிங்கம் (ராஜா)
யானை (ரஹ்மான்)
புலி (யுவன்)
சிறுத்தை (ஹாரிஸ்)
நரி (ஜி.வி.பி)

அப்போ தான் ஒரு குதிரை காட்டுக்குள்ள
முதன் முதலா அடைக்கலம் தேடி வருது,
அடைக்கலம் தேடி வந்த இடமோ பல
ஜாம்பவான் விலங்குகள் உள்ள அடர்ந்த
காட்டு பகுதி,

அப்போ அந்த குதிரை அடைக்கலம்
தேடி வந்த இடத்துல தன்னோட
பயத்த காமிக்க கூடாதுன்னு கண்ண
கட்டிக்கிட்டு அந்த காட்டுக்குள்ள ஒரு
எல்லை கோடு அமைச்சு அதை தொட்டு
விட்டு மீண்டும் இதே இடத்திற்கு எந்த
தடங்கலும் இன்றி வர வேண்டும் என்று
தனக்கு தானே ஒரு விஷப்பரிட்சை
வைத்துக்கொள்ளுச்சாம்,

கண்ண கட்டிக்கிட்டு ஓடுச்சாம்
முதல் அத்தியாயமே குதிரைக்கு வெற்றி,

இதற்கு பிறகு காட்டில் உள்ள
மற்ற விலங்குகள் அனைத்தும்
இந்த குதிரை மீது பார்வை படும் படி
அடுத்தடுத்து ஒவ்வொரு வித்தியாசமான
விஷப்பரிட்சையை தனக்கு தானே
வைத்துக்கொண்டு அதில்
வெற்றி கண்டதாம் குதிரை,

இப்போது அந்த காட்டில் தவிர்க்க
முடியாத ஒரு விலங்காகவும்
காட்டையே வேலி அமைத்து காக்கும்
ஒரு எல்லை சாமியாகவும் அந்த குதிரை
தன் சுயத்தில் உயர்ந்து நிற்கிறதாம்,

காட்டுக்குள் பயந்து கொண்டே
அடைக்கலம் தேடி வந்த குதிரை
இப்போது மற்ற விலங்குகளிடம்
மிக உயரிய சொத்தான நட்பை ஆழ்
மனதில் இருந்து பகிர்ந்துகொண்டதாம்,

இந்த குதிரையுடன் சேர்த்து அனைத்து
விலங்குகளும் சிங்கத்தின் பேச்சுக்கு
மரியாதை கொடுத்து சிங்கத்திடம்
இருந்து சற்று ஒதுங்கியே
இருக்கிறார்கள், என்ன தான்
இருந்தாலும் காட்டுக்கே ராஜால்ல,

ஆனால் இந்த குதிரைக்கு
தன்னோட வெற்றி தாகம் தீராமல்
இன்னும் வெற்றிகள் பல தேடி
பந்தயத்துல ஓடிக்கிட்டு இருக்கு,

இந்த சகாப்தத்துல இன்னும்
பல பந்தயம் அடிக்க இந்த குதிரை
தயாரா காத்துக்கிட்டு இருக்கு கோதால,

ஒரு வேல இந்த குதிரை
எப்போவாது விழுந்தாலும்
அடுத்த நொடி எழுந்து ஓடி தன்னோட
பயணத்த வெற்றியோட முடிக்கும்,

*

போட்டியில் தயார்நிலை
பந்தய ஒலி ஒலிக்கின்றது
குதிரை புழுதி பறக்க கிளம்பியது

*

ணே,
சோடி நான் போட்ருக்கேன்
பந்தயம் அடிச்சு காட்டுறேன்,

Happy Birthday SANA..!