Coronavirus

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

இந்தியாவில், கொரோனா தொற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம், நன்றாகவே குறைந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறைத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில், மாநில அரசுகளோடு, இணைந்து, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் லவ் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, வெளிநாடுகள் உட்பட இந்தியா தருவித்துள்ள கொரோனா அதிவிரைவு பரிசோதனைக்கான 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள், அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காகும் விகிதம் என்பது, ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக, 3 நாட்கள் என்ற அளவில் இருந்ததாகவும், தற்போது, அது 6 நாட்களாக குறைந்திருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், தேசிய அளவிலான, கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காகும் விகிதாச்சாரம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட 19 மாநிலங்களில், நன்றாகவே குறைந்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில், கொரோனாவிலிருந்து, குணமடைவோர் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் விகிதம், 80க்கு 20 என்ற அளவில் உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் வளர்ச்சி விகிதம், 40 விழுக்காடு அளவிற்கு சரிந்துள்ளதாகவும், குணமடைவோரின் எண்ணிக்கை, 13 விகிதத்திற்கு மேலாக உயர்ந்து வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வரும் மே மாதத்திற்குள், உள்நாட்டிலேயே, 10 லட்சம் பிசிஆர் கிட்டுகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், கூறியுள்ளது.

Related posts

IPL 2020: Members of Chennai Super Kings contingent, team test positive for COVID-19

Penbugs

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

Anjali Raga Jammy

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

PSG’s Neymar tests positive for coronavirus

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs