Coronavirus

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனி கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திமுகவில் மற்றொரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

Covid19: Lions take a nap on empty road amid lockdown

Penbugs

List of containment zones declared by GCC

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

Lockdown: A woman eats only once a day, feeds rest to her 13 dogs

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

Fujifilm, Nikon school offers free photography workshops during lockdown

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs