Coronavirus

கொரோனா தொற்றில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்‌.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 5ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக அமித் ஷா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார் ‌.

இன்று தனது ரிசல்ட் நெகட்டிவ் வந்ததாகவும் , கடவுளுக்கு நன்றியும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்த தொண்டர்களுக்கும் நன்றி எனவும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மேலும் சில நாட்கள் தனிமையில் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா குணமடைந்ததை அடுத்து பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Related posts

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 1,243 பேர் பாதிப்பு

Penbugs

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

England set to postponed India tour: Reports

Penbugs

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த கிளென்மார்க் நிறுவனம் …!

Penbugs

ஆர்டர் செய்தால் இப்போது ஆவின் பொருள்கள் வீடு தேடி வரும்…!

Penbugs

தமிழகத்தில் இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment