Coronavirus

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி பரிசோதனை செய்யவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழகம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டியதின் முக்கியத்துவம், உடனடியாக பரிசோதனைகள் நடத்த வேண்டியதின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க, வயதானவர்கள், நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளைக் கண்டறிவதும் கொரோனா பலியை தடுக்க உதவும் என்று கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இந்த விளக்கங்களை அடுத்து, சுகாதார உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதனுடன்,பொதுமக்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், கணக்கெடுப்பு குழுக்களை இதற்காக மேம்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனைகளில் நோயாளிகளைத் திறம்பட சோதனை செய்யவேண்டும் என்றும், சோதனை முடிவுகளை சோதனைக் கூடங்கள் உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related posts

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

COVID19: BCCI president Sourav Ganguly tests negative

Penbugs

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Penbugs